கடந்த வாரம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு படுமோசமான டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பிக்பாஸ். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். முதல் சீசனில் இருந்து தற்போது ஒளிபரப்பாகி வரும் 5ஆவது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும்போதெல்லாம், மற்ற் நிகழ்ச்சிகள், தொடர்கள் எல்லாம் காலி தான் என்று ரசிகர்கள் கூறுவார்கள். அந்தளவிற்கு அந்த நிகழ்ச்சி டிவியில் கெத்துக்காட்டி வந்தது. தற்போது, யார் கண்பட்டது என்றே தெரியவில்லை. பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவரவில்லை என்று தெரிகிறது. எப்போதும் டிஆர்பியில் கிங் ஆக இருக்கும் பிக்பாஸ், தற்போது ரேட்டிங்கில் குறைந்துள்ளது.
ஆமாம், கடந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சி, இதுவரை பிக்பாஸ் வரலாற்றில் இல்லாத அளவிற்கு படுமோசமான டிஆர்பியை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் வரலாற்றில் பதிவான மிக மோசமான TRP வாரம் இதுவாகும் என சிலர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க: Bigg Boss 5 Tamil: மகனை கண்டு மலர்ந்த தாமரை... பிக்பாஸ் வீட்டில் பிள்ளை நிலா!
ஆட்களை தேர்வு செய்த விதம், விறுவிறுப்புடன் செல்லாத எபிசோட்கள் போன்ற காரணங்கள் இந்த டிஆர்பிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இறங்கிய டிஆர்பியை ரேட்டிங்கை ஏற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் இருப்பதால், இனிவரும் எபிசோட்கள் விறுவிறுப்பாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்