Bigg Boss 7 Tamil: ”ஒரே வீட்டில் 11 பசங்க கூட இருந்ததால் போலீஸ் ரெய்டு வந்தாங்க..” - ஷாக் கொடுத்த பிக்பாஸ் பூர்ணிமா

Bigg Boss 7 Tamil: ஒரே வீட்டில் 11 பாய்ஸ் கூட தங்கியதால், போலீஸ் ரெய்டு வந்ததாக கண்ணீருடன் பூர்ணிமா பேசியது வைரலாகி வருகிறது.

Continues below advertisement
Bigg Boss 7 Tamil: ஒரே வீட்டில் 11 பாய்ஸ் கூட தங்கியதால், போலீஸ் ரெய்டு வந்ததாக கண்ணீருடன் பூர்ணிமா கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

பிக்பாஸ் 7:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளில் பிக்பாஸில் புதிய திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. சர்ச்சை, சண்டை, வாக்குவாதம், அழுகை என நிறைந்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு விதவிதமான டாஸ்குகளும் வைக்கப்படுகின்றன.
 
அந்த வகையில் இந்த வார எபிசோடில் கதை சொல்லும் டாஸ்க் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வைக்கப்பட்டது. அதில் பங்கேற்ற அனைவரும் அவரவர் வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அதில் பேசிய பூர்ணிமா தனது வாழ்வில் நடந்த சம்பவத்தை பகிர்ந்து அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். டாஸ்கில் பேசிய பூர்ணிமா, “ காலேஜ் படித்து முடித்ததும் ஐடி கம்பெனியில் வேலை பார்த்தேன். அங்கு 8 மாதம் வேலை செய்த பிறகு திடீரென வேலையில் இருந்து நிறுத்திட்டாங்க. வீட்டுக்கு பணம் அனுப்புவதற்காக வேலை தேடி அலைந்தேன். ஒரு டிஜிட்டல் கம்பெனியில் வேலை கிடைத்தது. எனக்கு தங்குவதற்கு வீடு இல்லாததால் 11 ஆண்கள் தங்கி இருக்கும் வீட்டில் நானும் பணம் கொடுத்து தங்கி இருந்தேன். 
 
அந்த பசங்களால் எனக்கு எந்த தொந்தரவும் வரவில்லை. ஆனால், அக்கம்பக்கத்தினர் தப்பா பேசனாங்க. ஒரு முறை போலீசார் தப்பு நடப்பதாக கூறி நான் இருந்த வீட்டுக்கு வந்து விசாரித்தாங்க. என்னை பற்றி எல்லாரும் நல்லா சொன்னதால என்னை விட்டுட்டு போனாங்க. அதன்பிறகு அங்கிருந்து வெளியேறிய நான், வேலை செய்த கம்பெனியில் தங்கினேன். ஒரு மாதம் தேடி அலைந்த பிறகு தான் எனக்கு சென்னையில் வீடு கிடைத்தது. ஒரு பொண்ணு தனியா இருக்க வீடு கேட்டா அவ்வளவு கேவலமா பார்த்தாங்க. அதன்பிறகு யூடியூபில் வீடியோக்கள் போட்டு பணம் சம்பாதிக்க ஆரம்பித்தேன். வீடு, கார் வாங்கினேன்” என தனது வாழ்வின் கசப்பான நிகழ்வுகளை பூர்ணிமா பகிர்ந்து கொண்டார். 
 
 
 
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola