தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக வலம் வருபவர் ஆர்த்தி. இவர் விஜய்டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 1 யிலும் பங்கேற்று பிரபலமானார். இவரின் கணவர் கணேஷ்கர். காமெடி நடிகரான இவர் அண்மையில் சாலை உள்ள தடுப்பு ஒன்றில் மோதியதாகவும், அங்கு கூட்டம் கூடிய நிலையில் அவர் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகி விட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இதற்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில், ஆர்த்தியும் அவரது கணவரும் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
இது குறித்து அவர்கள் கூறும் போது, “ கடந்த சனிக்கிழமை ஒரு நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்த ஆர்த்தியை, அழைப்பதற்காக வேகமாக காரில் சென்றுகொண்டிருந்தேன். டுமீல் குப்பம் வழியாக வந்து கொண்டிருந்த போது, சாலையில் இருந்த ஸ்பீடு பிரேக்கர் ஒன்று இருந்ததை கவனிக்காமல் அதன்மீது வேகமாக காரை ஏத்திவிட்டேன். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. அதனால் இடது பக்கம் இருந்த தடுப்புச்சுவர் மீது கார்மோதி விட்டது.
கார் மோதிய உடனே ஏர் பலூன் வெடித்து விட்டது. கார் ஸ்டீயரிங் எனது நெஞ்சில் வந்து வேகமாக இடித்து விட்டது. அந்த சமயத்தில் நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. காரில் இருந்து உடனே என்னைத் தூக்கியவரிடம், எனது மனைவிக்கு கால் செய்ய சொன்னேன். அவர் கால் செய்ய, தகவல் ஆர்த்திக்கு போன நிலையில், உடனே ஆர்த்தி ஸ்பாட்டுக்கு வந்து விட்டார். உடனே காரை அங்கேயே போட்டுவிட்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு கிளம்பினோம். அங்கு சென்று கொண்டிருந்த போதுதான் போலீஸ் எங்களை தொடர்பு கொண்டனர். அவர்கள் எங்கள் எல்லா விவரங்களையும் வாங்கிக்கொண்டனர்.
ஆர்த்தி நிகழ்ச்சிக்காக மேக்க அப் எல்லாம் போட்டுவிட்டு இருந்ததால் நண்பர் ஒருவரிடம் என்னை ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினார். அதன் பின்னர் நானும் அவரும் ஒரு மருத்துவமனைக்கு சென்றோம். அவர்கள் சில மருந்துகளை கொடுத்தார்கள். ஆனால் வலி குறையவே இல்லை. இதற்கிடையே இன்னொரு நண்பன் ஒருவரிடம் என்னை வேறொரு மருத்துவரிடம் அழைத்து செல்ல சொன்னேன். ஆனால் அவன் இந்த நேரத்தில் மருத்துவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் நீ இங்கேயே இரு என்று அவனது வீட்டில் இருக்க வைத்தார். என்னுடைய செல்போன் காரிலேயே விட்டு விட்டதால், ஆர்த்தியால் என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையில் மீடியாவில் என்னென்னவோ தகவல் பரவி விட்டது. போலீஸ் எனக்கு ஆர்த்தியை தொடர்பு கொண்டு உங்களுடைய கணவர் எங்கு சென்றார் என்று தெரியாதா என்றும் கேட்டுள்ளனர். உணமையில் போலீஸ் என்னை தேடியது நான் குடித்துவிட்டு கார் ஓட்டினேனா என்பதை தெரிந்துகொள்ளதான். இதுதான் நடந்தது அதனால் எதிர்மறையான செய்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள்” என்றனர்.