மாடலிங் மூலம் திரைத்துறையில் நுழைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சாக்ஷி "ராஜா ராணி" திரைப்படத்தில் ஒரு நகைச்சுவையான சீனில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து விஸ்வாசம், காலா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பரிச்சயமானவர். 



பிக் பாஸ் பிரவேசம் :


சாக்ஷியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது பிக் பாஸ் வாய்ப்பு. இவர் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் ஒரு போட்டியாளராக  கலந்து கொண்டார். பல சர்ச்சைகளுக்கு நடுவே பிக் பாஸ் வீட்டிற்குள் சிக்கி தவித்த சாக்ஷி அங்கு இருந்து வெளியேறிய பிறகு பல பட வாய்ப்புகள் கிடைத்து பிஸியாகி விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி நடிகை சாக்ஷிக்கு திரை வாழ்க்கையில் ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 


பிக் பாஸ் ஸ்க்ரிப்டட்டா ?


சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் பிக் பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஸ்க்ரிப்டட் என கூறப்படுவது உண்மையா என கேட்டதற்கு அதுக்கு " ஸ்க்ரிப்டட்டாக இருந்தால் என்ன தவறு. ஒரு நிகழ்ச்சி நடத்துவதன் நோக்கமே ரசிகர்களை அதிகரிக்க வேண்டும், TRB ரேட்டிங்கை அதிகரிக்க வேண்டும் என்பது தானே. அப்படி இருக்கும் போது அது ஸ்க்ரிப்டட்டாக இருப்பதில் என்ன தவறு" என ஒரு ட்விஸ்டை வைத்து குழப்பிவிட்டார் சாக்ஷி. 


 






 


ஃபிட்னெஸ் குயின் :


சாக்ஷி எப்போதுமே இளமையாக வைத்திருப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். அவரின் ஃபிட்னெஸ்க்கு முக்கியமான காரணம் அவரின் ரெகுலரான உடற்பயிற்சி. அது தான் அவரை உடல் அளவிலும் மன அளவிலும் ஸ்ட்ராங்காக வைத்திருக்க உறுதுணையாய் இருக்கிறது. இதன் மூலம் சாக்ஷிக்கு பல படங்களில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். 


 


 



 


சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்ட்டிவாக இருக்கும் சாக்ஷி அவ்வப்போது வீடியோ, போட்டோ என பகிர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளவர். அந்த வகையில் தற்போது அவர் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 


 






பிஸி ஷெட்யூல் :


தற்போது சாக்ஷி அடுத்தடுத்து பல படங்களின் ரிலீஸ்க்காக காத்து இருக்கிறார். நடிகர் பிரபுதேவா உடன் "பகிரா", எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் "நான் கடவுள் இல்லை" படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம், "கெஸ்ட்" திரைப்படத்தில் ஹீரோயின் ரோல், இயக்குனர் சக்தி இயக்கத்தில் இரண்டு திரைப்படங்கள் என மிகவும் பிஸியாக இருக்கிறாராம் சாக்ஷி.