இந்தியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகையும் தொகுப்பாளருமான பூஜா மிஸ்ரா. இவர் பிரபல மற்றும் மூத்த நடிகரான சத்ருகன் சின்ஹாவும், அவரது மனைவி பூனம் சின்ஹாவும் தன்னை பாலியல் மோசடியில் ஈடுபடுத்தி தனது வாழ்க்கையையும் சீரழித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.


 






பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாக்களில் புகழ்பெற்றவர் நடிகை ஷோனக்‌ஷி சின்ஹா. இவரது தந்தை சத்ருகன் சின்ஹா இந்தியில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர்.  இவரும் இவரது மனைவியும் தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்  பூஜா மிஸ்ரா. 



பூஜா மிஸ்ரா கூறியதாவது :


“ என்னுடைய கன்னித்தன்மையை விற்றுதான் சத்ருகன் சின்ஹா ​​தனது மகள் சோனாக்ஷியை நட்சத்திரமாக மாற்றினார். சோனக்‌ஷிக்கு ஃபேஷன் டிசைனராக மாற வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருந்தது. சத்ருகன் மற்றும் பூனம் தன்னிடம் இருந்து 35 படங்களை திருடிவிட்டனர். சின்ஹா ​​குடும்பம் பேராசை மற்றும் பேய்த்தனமானது.அவர்கள் எனது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து எனது ஸ்பான்ஸர்ஸை திருடுவது வழக்கமாக கொண்டிருந்தனர்.நான் ஒருமுறை சத்ருகன் சின்ஹாவின் பிறந்தநாளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வாழ்த்து தெரிவிக்கச் சென்றபோது, ​​பூனம் சின்ஹா ​​எனக்கு சூனியம் செய்யப்பட்ட உணவு எதையோ ஊட்டி விட்டார்.சத்ருகன் சின்ஹாவால் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. சத்ருகன் சின்ஹா ​​எனக்கு போதைப்பொருள் ஊட்டி பலமுறை பயன்படுத்திக் கொண்டார். எனது தோல்விக்கு யாரேனும் குற்றம் சாட்டப்பட்டால், அது அவர் மட்டுமே. 17 வருடங்களாக கஷ்டப்பட்டேன். “ என தெரிவித்துள்ளார்.


முன்னதாக, பூஜா மிஸ்ரா சல்மான் கான் மற்றும் அவரது சகோதரர்களான சோஹைல் கான் மற்றும் அர்பாஸ் கான் தன்னை எட்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.