சீரியல்களில் சிலவற்றிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குப் பெற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 யில்  பங்குபெற்ற இவருக்கும், அந்த நிகழ்ச்சியில் பெற்ற இலங்கை தொகுப்பாளினி லாஸ்லியாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் கவின் லாஸ்லியா ஆர்மியும் உருவானது. 




ஆனால் அந்த சீசன் முடிவடைந்த பின்னர் இருவரும் தங்களது வழிகளை பார்த்து சென்றுவிட்டனர். ஆமா, அந்தக் காதல் என்ன ஆனது என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இருவர் தரப்பில் இருந்தும் எந்தப்பதிலும் இல்லை. இந்த நிலையில் இந்த காதல் என்ன ஆனது என்பது குறித்து நடிகர் கவின் பேசியிருக்கிறார்.  அதில், “காதல் என்பது பற்றி ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு புரிதல் இருந்திருக்கிறது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நாம் உண்மையாக நேசிக்கிற விஷயம் அல்லது ஆளுக்காக நாம் கடைசி வரை உண்மையாக இருக்க வேண்டும்.


எவ்வளவு தூரம் போக வேண்டும் என்றாலும் அதற்காக போக வேண்டும். அப்படிப்பட்ட உண்மையான காதலை இன்னும் நான் தற்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக ஒரு நாள் என்றைக்காவது அப்படி ஒரு விஷயம் அமையும். சந்தோசமாக ஒரு வாழ்க்கை கிடைக்கும் என நம்புகிறேன். "நான் என் வேலையையும் காதலிக்கிறேன். அது தான் கடைசி வரை சோறு போட போகிறது.” என்று பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் கவின் சிங்கிளாக இருப்பது உறுதியாகியிருக்கிறது. 


கவின் நடித்த லிப்ட் மற்றும் ஆகாஷ் வாணி உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கவின் நயன்தாரா தயாரித்து வரும் ஊர்க்குருவி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே விஜயின், பீஸ்ட் படத்தில் நடித்துள்ள இவர், நடிகர் அஜித்தும் இயக்குநர் ஹெச். வினோத் இணையும் அடுத்தப்படத்தில் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.