கணவர் வீட்டைவிட்டுவெளியேற இதுதான் காரணம் - இசைவாணி பகிர்ந்துகொண்ட சீக்ரெட்!

இசைவாணி கடைசியாக நடந்த பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்ட கன்டஸ்டன்ட் இவர். நிகழ்ச்சி தொடங்கிய 49வது நாளிலேயே எலிமினேட் ஆனார்.

Continues below advertisement

இசைவாணி கடைசியாக நடந்த பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்ட கன்டஸ்டன்ட் இவர். நிகழ்ச்சி தொடங்கிய 49வது நாளிலேயே எலிமினேட் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசனுக்கு ஒருவர் தங்களின் கடந்த கால கஷ்டத்தைச் சொல்லி அழுக வைப்பார்கள். சீசன் 5ல் அந்த ரோலை முதலில் எடுத்தவர் தான் நம் இசைவாணி. சிறு வயதில் கண்ட வறுமை. படிக்க சிரமப்பட்டது. நல்ல ஆடைகளுக்கு ஏங்கியது. தற்போது வரை ஒரு சொந்த வீடு கூட இல்லாமல் இருப்பது என இசைவாணி புலம்பித் தள்ளினார். 

Continues below advertisement

கணவரை மறைத்த இசைவாணி:

இசைவாணி நிகழ்ச்சியில் புலம்பித் தள்ளினாலும் கூட தன் கணவர் பற்றி எதுவுமே வாய் திறக்கவில்லை. தனக்கு திருமணமாகிவிட்டது என்ற தகவலை கூட அவர் தெரிவிக்கவில்லை. வீட்டைப் பற்றி அவ்வளவு புலம்பிய இசைவாணி ஏன் கணவர் பற்றிய தகவல்களை மறைத்தார் என்ற கேள்விகள் எழுந்தன. அதற்குக் காரணம் திடீரென சமூக வலைதளங்களில் வைரலான இசைவாணி மாலையும் கழுத்துமாக அவரது கணவருடன் இருக்கும் புகைப்படம். அந்தப் புகைப்படத்தைப் பார்த்து அட முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டாரே என்று எல்லோரும் இசைவாணியை வசை பாடினர்.

உண்மையைச் சொன்ன இசைவாணி:

அப்புறதம் தான் கணவரைப் பற்றிய விவரங்களைச் சொன்னார் இசைவாணி. எனக்கும் சதீஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கானா பாடல் பாட பெற்றோர் வீட்டில் இருந்த ஆதரவு எனக்கு கணவர் வீட்டில் கிடைக்கவில்லை. அதனால் தான் அந்த வீட்டை விட்டு வந்துவிட்டேன். தற்போது அவருக்கு வேறு திருமணம் கூட நடந்துவிட்டது. அந்த குடும்பத்துடன் நான் தற்போது தொடர்பில் இல்லை என்று கூறியுள்ளார். 

இடையில், இசைவாணி கணவர் மீது போலீஸில் புகார் கூறியிருந்தார். அதில் நாங்கள் இருவரும் மனமொத்து விவாகரத்து பெற்ற நிலையில் சதீஷ் வேறொரு பெண்ணை மணந்துக் கொண்டு, தன்னை மனைவி எனக் குறிப்பிட்டு இசை நிகழ்ச்சிகளில் பாட வைக்கிறேன் எனக் கூறி பணம் பெற்றுள்ளதாகவும், பணத்தைக் கொடுத்தவர்கள் தற்போது தன்னிடம் வந்து கேட்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.


இதற்கும் நெட்டிசன்கள் சும்மா இல்லை இது சாதாரண விஷயம் தானே இதை ஏன் மறைக்கணும். உங்களைவிட உண்மையைச் சொன்ன பாவனி ரெட்டி தான் எங்கள் ஃபேவரைட் என்று கூறிவருகின்றனர். பாவனி காதலித்து திருமணம் செய்து கொண்ட நபர் விபத்தில் இறந்துவிட்டார். அதன் பின்னால் அவருக்கு இன்னொரு காதல் வந்தது. ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது. இந்த உண்மைகளை எல்லாம் பாவனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சொன்னார். இப்போது பாவனி ஆமீர் ஜோடி காதலில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola