சின்னத்திரையில் எத்தனையோ தொகுப்பாளர்களை தமிழ் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். கலகலப்பு அவர்களின் பொதுவான அடையாளம் என்றாலும், அதிலும் தனித்து தனித்துவம் படைத்து வருபவர், ப்ரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியில் பிரபலமான ஷோக்களை  தொகுத்து வழங்கி வரும் ப்ரியங்கா, நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 ல், போட்டியாளராக பங்கெடுத்தார்.


வழக்கம் போல, தன்னுடைய கலகலப்பான நடவடிக்கையால் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றியதில் ப்ரியங்காவிற்கு பெரிய பங்கு உண்டு. ஆனாலும், ப்ரியங்காவின் திருமண வாழ்க்கை குறித்த கேள்விகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்தது. ப்ரீஷ் ரவுண்டில் போட்டியாளர்களை அவரது உறவினர்கள் சந்திக்கும் நிகழ்வில், ப்ரியங்காவின் கணவர் வரவில்லை. அதே நிகழ்ச்சியில், மற்றொரு போட்டியாளரும் தன்னைப் போல ‛சோலோ’ என்கிற அர்த்தத்தில் ஒரு டயலாக்கை ப்ரியங்கா பேசியிருப்பார். 


இப்படி பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தனது குடும்ப வாழ்க்கை குறித்த தெளிவான விளக்கத்தை ப்ரியங்கா கூறாமல் இருந்தார். அது தொடர்பான கேள்வி எழுந்த போதும் கூட ,அவர் பதிலளிக்கவில்லை. பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, தனது தாய் மற்றும் சகோதரன் குறித்து பேசிய ப்ரியங்கா, கணவர் பற்றி மூச்சே விடவில்லை. இந்நிலையில், சமீபத்தில் அவரது சகோதரருக்கு குழந்தை பிறந்தது. அதை பெரிய அளவில் மகிழ்வுடன் பகிர்ந்த ப்ரியங்கா, தனது மகிழ்ச்சியை தீவிரமாக வெளிப்படுத்தினர். 






அப்போது ரசிகர்கள் பலரும், அத்தையான ப்ரியங்காவிற்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்க, ஒரே ஒரு ரசிகர் மட்டும், ‛திருமணத்திற்கு பிறகும் எல்லாவற்றையும் எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள்?’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ப்ரியங்கா கூறிய பதில் தான், இப்போது ஹாட் டாஃபிக் ஆகியிருக்கிறது. 


‛‛நம்மை புரிந்து கொள்ளும் கணவர் இருந்தால், கணவருக்கு நாம் விசுவாசமாக இருந்தால்’’ எல்லாம் சாத்தியம் தான்’’ என்று பதிலளித்திருந்தார். ப்ரியங்காவின் இந்த பதிலை வைத்து, தனது கணவரை ப்ரியங்கா பிரிந்து விட்டார் என்றும், அதனால் தான் அவர் தொடர்பான போட்டோக்களை அவர் வெளியிடவில்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.