பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சின்னத்திரை பிரபலமான வைஷாலி கெம்கர் தனது சினிமா பயணத்தை பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
சின்னத்திரையில் மிக முக்கிய நிகழ்ச்சியாக அறியப்படும் பிக்பாஸ் தற்போது 9வது சீசனாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதில் முதலில் பங்கேற்ற 20 போட்டியாளர்களில் ஒருவராக வைஷாலி கெம்கர் கலந்து கொண்டார். இவர் ஏற்கனவே ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் என்பதால் ஆரம்பம் முதலே கெமி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் கெமி பிக்பாஸ் வீட்டில் இருந்து 49வது நாளில் யாரும் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் அவரின் பங்களிப்பு சிறப்பாக இருந்ததாக பலரும் பாராட்டினர். அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சியின் போது தான் வாழ்க்கையில் செய்த சாதனைகளைப் பட்டியலிட்ட போது பலரும் ஆச்சரியப்பட்டனர். அப்படிப்பட்ட கெமி வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.
வில்லியாக நடிக்கும் கெமி
இதனைத் தொடர்ந்து வெளியில் வந்த அவர் பல்வேறு நேர்காணல்களில் கலந்து கொண்டு வருகிறார். அதில் ஒரு நேர்காணலில் சினிமா பயணம் பற்றி பேசியுள்ளார். அதாவது தற்போது நான் 2 படங்கள் பண்ணிட்டு இருக்கேன். அதில் ஒன்று ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள மை லார்ட் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறேன். அந்த படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே ஒரு பாடல் கூட ரிலீசாகி விட்டது. இந்த நெகட்டிவ் கேரக்டர் எனக்கே ரொம்ப புதிதானது. அதுதான் முதலில் ரிலீசாக உள்ளது.
அடுத்ததாக நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தில் இடம் பெற்றுள்ளேன். இதில் வேடிக்கையான ஒரு கேரக்டர் பண்ணுகிறேன். படத்தில் நிறைய காட்சிகளில் நான் வருவேன். முதல் ஷெட்யூல் முடிந்து விட்டது. அவர்களுடன் நான் ஷூட்டிங்கில் இருந்த அனுபவம் ரொம்ப நன்றாக இருந்தது. ஒவ்வொரு நொடியும் நான் ரொம்ப என்ஜாய் பண்ணி நடித்தேன். எனக்கு சினிமா என்பது புது அனுபவம் தான். அவ்வளவு பெரிய ஸ்டார் (நயன்தாரா) என்பதால் பயந்தேன். ஆனால் கவின் நடிக்க சொல்லி கொடுத்த விதம், நயன்தாரா எங்களுடன் சகஜமாக இருந்த விதம் எல்லாம் சிறப்பாக இருந்தது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடிக்க உள்ளது. 2026ல் ஹாய் படம் வெளியாகும். நானும் அந்த படத்துக்காக ரொம்ப வெயிட் பண்றேன்” என கெமி கூறியுள்ளார்.