விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான ஒன்று உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த பிக் பாஸ் சீசன் போட்டியாளரன அசீம் பிக் பாஸ் டைட்டிலை வென்றார். 


 



போட்டியாளர்கள் விவரம் :


பிக் பாஸ் சீசன் 6 போட்டியில் ஜிபி முத்து, திருநங்கை ஷிவின் கணேசன், அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி, அசீம், ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா, ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக் டாக் பிரபலம் தனலட்சுமி, ராம் ராமசாமி, மைனா நந்தினி மற்றும் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றனர். முந்தைய சீசன்களோடு ஒப்பிடுகையில் இந்த பிக் பாஸ் சீசன் சற்று சுவாரசியம் குறைந்தது போலவே பார்வையாளர்களுக்கு தோன்றியது. போட்டியாளர்களின் ஈடுபாடு குறைவாக இருந்தது தான் சுவாரசியம் குறைவாக இருந்ததற்கு காரணமாக கூறப்பட்டது. இருப்பினும் சண்டை சச்சரவு, கூச்சல் இவை அனைத்தும் கொஞ்சம் தூக்கலாகவே இந்த சீசன்னில் இருந்தது. 






மிகவும் சுவாரஸ்யமான டாஸ்க் :


மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த போட்டியில் வாரம் ஒருவராக வெளியேற இறுதி சுற்றுக்கு ஐந்து பேர் தகுதி பெற்று இருந்தனர். பிக் பாஸ் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கும் சமயத்தில் இருக்கும் பண பேட்டி டாஸ்க் அனைவரையும் மிகவும் ஈர்க்கும் ஒரு டாஸ்க். யார் எவ்வளவு பணத்தை எடுத்து கொண்டு புத்திசாலித்தனமாக வெளியேறுகிறார்கள் என்பது குறித்து பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள எப்பவுமே ஆர்வம் அதிகமாக காட்டுவார்கள். அந்த வகையில் முதலில் வந்த பண பேட்டி டாஸ்கில் 3 லட்சத்துடன் கதிரவன் வெளியேறினார். இரண்டாவதாக  மீண்டும் ஒரு பண  பை டாஸ்க் வைக்கப்பட்டது இது தான் முதல் முறை. ஒவ்வொரு நிமிடத்திற்கு பணம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்ற பிக் பாஸ் அறிவிப்பின் படி 11.75 லட்சத்துடன் அமுதவாணன் வெளியேறினார். அடுத்தாக மைனா நந்தினியும் இரவோடு இரவாக வைக்கப்பட்ட டாஸ்கில் வெளியேறினார். ஆக இறுதி போட்டியில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் மட்டுமே போட்டியிட்டனர். இவர்களில் யார் மகுடத்தை சூட போகிறார் என்பது குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி இருந்தது. 






குறைவான பரிசு தொகை பெற்ற அசீம் :


பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இரண்டாவது ரன்னர் அப்பாக ஷிவின், முதல் ரன்னர் அப்பாக விக்ரமன் கைப்பற்ற பிக் பாஸ் டைட்டிலை வென்றார் அசீம். வழக்கமாக ஒவ்வொரு சீசன் வெற்றியாளருக்கு வழங்கப்படும் பரிசு தொகை 50 லட்சம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் இந்த சீன் வெற்றியாளராக அசீம் மிகவும் குறைந்த பரிசு தொகையே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் கதிரவன் எடுத்து சென்ற 3 லட்சம் மற்றும் அமுதவாணன் எடுத்து சென்ற 13 லட்சம் போக மீதம் உள்ள தொகை 34 லட்சம். அதிலும் ஜி.எஸ்.டி ஒன்றை பிடித்தம் எல்லாம் போக அசீமுக்கு கையில் கிடைக்கும் தொகை 24 லட்சம் மட்டுமே. இது மற்ற சீசன்களில் போட்டியாளர்கள் வென்ற தொகையை ஒப்பிடுகையில் மிக குறைவான தொகை என்பது குறிப்பிடத்தக்கது.