பிக்பாஸ் சீசன் 6 தொடர்பான புதிய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. 






பிக் பாஸ் சீசன் 4 மற்றும் சீசன் 5 அக்டோபர் மாதத்தில் தொடங்கியது போல் இந்த சீசனும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த சீசனில் பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


 


 






அதற்கான விளம்பரம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. அதனைத்தொடர்ந்து விரைவில் பிக்பாஸ் சீசன் 6 வரும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், நேற்று கமல் நடிப்பில் வெளியான ப்ரொமோ ஒன்று வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போதும் புதிய ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.






இந்த சீசனிலும் ரூட்டை மாற்றி களேபரம் செய்ய திட்டமிட்டும் இருக்கும் விஜய் டிவி வீட்டுக்குள்ளே போகும் போட்டியாளர்களையும் கண்கொத்தி பாம்பாக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அந்தத்தகவல்களின் படி, இந்த சீசனில் விஜயி டிவி தொகுப்பாளர் ரக்சன், சுசித்ராவின் முன்னள் கணவர் கார்த்திக்குமார், சூப்பர் சிங்கர் ராக லெட்சுமி, இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகா, தொகுப்பாளினி டிடி, பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சீரியல் நடிகை ஸ்ரீநதி, குக் வித் கோமாளி தர்ஷா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது..