Ajith Latest Photo: 51 வயதிலும் கரடுமுரடான பாதை.. ஏகே 61 ஆன் தி வே.. அப்டேட் கொடுத்த சார்பட்டா நடிகர்..!

அஜித்குமார் போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் AK 61 என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமைக்குப் பின் 3வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது.

Continues below advertisement

நடிகர் அஜித் காஷ்மீர் சென்ற புகைப்படங்களை நடிகர் ஜான் கோக்கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அஜித்குமார் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் தற்காலிகமாக AK 61 என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்குப் பின் 3வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபலமான மலையாள நடிகையான மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். கடைசி கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது AK 61 படப்பிடிப்பில் இருந்து திரும்பிய அஜித்குமார் இமயமலைக்கு பைக்கில் பயணம் செய்துள்ளார். சென்னையில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லடாக்கிற்கு விமானம் மூலம் பயணம் செய்து அங்கிருந்து இமயமலைக்கு நண்பர்களுடன் சாலையில் பயணம் செய்துள்ளார் நடிகர் அஜித்குமார்.

இந்த பைக் பயணத்தை நான்கு நாட்கள் மேற்கொண்டுள்ளார். இமயமலை பயணத்தின் போது அவர் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. 

இதேபோல் லடாக் பகுதிக்கு சென்ற அஜித், அங்குள்ள கார்­கில் போர் நினை­வி­டத்­துக்­குச் சென்று மரியாதை செலுத்தினார். மேலும் அப்­ப­கு­தி­யில் கட­மை­யாற்­றும் இந்­திய ராணுவ வீரர்­களு­டன் அவர் கலந்­து­ரை­யாடினார். இந்நிலையில் அஜித்தின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ள அவருடன் வீரம் படத்தில் நடித்த நடிகரும், ரசிகருமான ஜான் கோக்கன் , 51 வயதில் கரடுமுரடான பாதையில் பைக் ஓட்டும் அஜித், விரைவில் 61வது படத்தின் மூலம் உங்களை சந்திப்பார் என தெரிவித்துள்ளார். 

 

Continues below advertisement