Bigg Boss: கேஸ் சிலிண்டர் அருகே சிகரெட்.. மலையாள பிக்பாஸில் முதல் நாளே பயமுறுத்திய போட்டியாளர்!

Bigg Boss 6 Malayalam: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிகளே தோற்றுப் போகும் அளவுக்கு முதல் நாளே மலையாளம் பிக்பாஸ் சீசன் 6 வீட்டுக்குள் அடிதடி ரேகை அரங்கேறி அதகளம் நடந்துள்ளது.

Continues below advertisement

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 6, மார்ச் 10ஆம் தேதியான நேற்று தொடங்கியது. ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்.   

Continues below advertisement

அன்சிபா ஹாசன், அப்சரா ரத்னகரன், அர்ஜுன் ஷியாம், அசி ராக்கி, கேப்ரி ஜோஸ், ஜான்மோனி தாஸ், ஜாஸ்மின் ஜாபர், ஜின்டோ  பாடிகிராஃப்ட், நிஷானா என், நோரா முஸ்கன், ரதீஷ் குமார், ரேஷ்மின் பாய், ரிஷி எஸ் குமார், சரண்யா ஆனந்த், சிஜோ ஜான், ஸ்ரீரேகா ராஜகோபால், ஸ்ரீது கிருஷ்ணன் , சுரேஷ் மேனன், யமுனா ராணி என திரை நட்சத்திரங்கள், சோசியல் மீடியா பிரபலங்கள் மற்றும் சாமானிய மக்கள் என மொத்தம் 19 பேர் இந்த சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். 

 


பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிகளே தோற்றுப் போகும் அளவுக்கு முதல் நாளே மலையாளம் பிக்பாஸ் சீசன் 6 வீட்டுக்குள் அடிதடி ரேகை அரங்கேறி அதகளம் நடந்துள்ளது. ரதீஷ் மற்றும் ஜன்மோனி தாஸ் இருவருக்குமிடையே நடைபெற்ற சண்டை வீட்டில் உள்ள மொத்தப் பகுதிகளிலும் பரவியது.

ஜன்மோனி தாஸ் சிகரெட் பிடித்ததை ரதீஷ் எதிர்த்ததால் பிரச்சினை தொடங்கியது. புதிதாக கன்டென்ட்களை கொடுப்பேன் என முடிவுடன் தான் ரதீஷ் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அதை முதல் நாளே தொடங்கும் விதமாக ரதீஷ் ஜன்மோனி தாஸ் இடையே சண்டை வெடித்தது.

ஜன்மோனி தாஸை வேண்டுமென்றே சண்டை இழுத்துதான் அவர் பேசுவதைக் கிண்டலடித்துள்ளார். மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் அவர்கள் இடையே நடந்த வாக்குவாதத்தை தடுத்து விட்டாலும், ஜன்மோனி சமையலறையில் இருந்து வெளியேறும் முன்னர் அடுப்பில் சிகரெட்டை பற்றவைத்து வெளியில் ஸ்மோக்கிங் ஏரியாவிற்கு சென்றுவிட்டார். பிக்பாஸ் சிகரெட்களை வழங்கி இருந்தாலும் லைட்டர் வழங்காததால் அதை அடுப்பில் இருந்து பற்ற வைத்துள்ளார் ஜன்மோனி தாஸ்.

 

இதை சிஜோ சுட்டிக்காட்ட ரதீஷ் அந்தப் பிரச்சினையை ஊதி பெருசாகிவிட்டார். கேஸ் வெடித்து இருந்தால் என்ன செய்வது, இத்தனை உயிருடன் விளையாடுவது தவறு எனக் கூறி ரதீஷ், ஜன்மோனியிடம் கூறியதால் சண்டை முற்றியது. ரதீஷ் சொன்னது நல்ல விஷயம் தான் என்றாலும் அதை இவ்வளவு பெரிய சண்டையாக ஊதிப் பெருசாக்க வேண்டிய அவசியமில்லை. இதன் காரணமாக சிஜோ மற்றும் ஜாஸ்மின் தலையிட்டனர். இதனால் அவர்கள் நால்வருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. 

ரதீஷ், ஜன்மோனி தாஸ், ஜாஸ்மின் மற்றும் சிஜோ பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே கவனம் பெற்றனர். மற்றும் 15 போட்டியாளர்கள் வரும் நாட்களில் எந்த அளவுக்கு ஆக்டிவாக மாறுவார்கள் என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola