விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தனது 72 ஆவது நாளை நிறைவு செய்திருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இமான் அண்ணாச்சி வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 11 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கின்றனர். அண்மையில் பிக்பாஸ் வீட்டிற்குள் பற்றி எரிந்த, அபிநய் - பாவ்னி விவகாரம் இன்னும் அணைந்தபாடில்லை.


நேற்றும் அந்த பழைய திரியை நெம்பி கொண்டிருந்தது பிக்பாஸ் வீடு. இவைத்தவிர தரவரிசைப்பட்டியல், அபி - நிரூப் சண்டை, முடிவில் அக்‌ஷராவின் கெஞ்சல்.. ஒரு வழியாக முடிந்தது நேற்றைய எபிசோடு.


இந்த நிலையில்தான் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அபி முதல் பர்சர் அடித்து இந்தப் போட்டி தொடங்கிய பின், மூன்றாம் பர்சர் அடிக்கும் போது யாருடைய முகம் வருகிறதோ அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்கிறார். இதனையடுத்து டாஸ்க் தொடங்குகிறது.


அந்த டாஸ்க்கில் ராஜூ முகம் வந்து விட, அதன் மீது ஏறி உட்காருகிறார் ராஜூ.. தொடர்ந்து சகப் போட்டியாளர்கள் பெட்டியின் பக்கத்தை மாற்ற முயல ராஜூ கீழே விழுந்து விடுகிறார். இருந்தாலும் மீண்டும் பெட்டியின் மேல் உட்கார்ந்து கொண்டு எழாமால் இருந்தார் ராஜூ. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அக்‌ஷரா நீ இப்படி உட்கார்ந்து கொண்டால் நான் எப்படி மாற்றுவே என ராஜூவிடம் கேட்க, சும்மா இரு என்று கூறுகிறார் ராஜூ. இதனைக் கேட்டு கடுப்பான அக்‌ஷரா அங்கிருந்து செல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.