விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இது வரை 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், தற்போது  ராஜு, அமீர், நிரூப், தாமரை, பிரியங்கா, சிபி, பாவ்னி ஆகியோருடன் போட்டி இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இதில் அமீர் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த சீசன் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், போட்டியின் முக்கிய வாரமாக தற்போதைய வாரம் பார்க்கப்படுகிறது. 




காரணம் பணப்பரிசு வாய்ப்பு தரும் டாஸ்க் நேற்று தொடங்கியது. அந்த டாஸ்க்கின் படி, குறிப்பிட்ட தொகையை போட்டியாளர்களிடம் காண்பித்து, வேண்டுமானால், அந்த தொகையுடன் வெளியேறலாம் என்ற ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஏலம் போல அந்த தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதை தேர்வு செய்வதும், நிராகரிப்பதும் போட்டியாளர்களின் கையில் விடப்படும். 


இந்த சீசனுக்கான டாஸ்க், நேற்று தொடங்கியது. இந்தமுறை புதிய யுக்தியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள பரம்பரா வெப்சீரிஸ் பிரமோஷனுக்காக அதில் நடித்த நடிகர் சரத்குமாரை, களத்தில் இறக்கியது விஜய் டிவி நிர்வாகம். 


 






பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சரத்குமார் அன்பே சிவம் கமல் போல ஆடை அணிந்து வந்தார். இதனை நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 93 நாட்கள் கடந்து விட்ட நிலையில், போட்டியாளர்ளுக்கு நெடுநாளாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்த உணர்வு வருவது இயல்பு. இதனால் போட்டியில் இருந்து போட்டியாளர்கள் வெளியேற நினைப்பர். அப்படி நினைக்க கூடாது என்பதற்காக விஜய் டிவி ஒரு நிபந்தனையை விதித்துள்ளதாம். 


அதன்படி போட்டியில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்கு நிர்வாகம் 50 லட்சம் அபராதம் விதிக்குமாம். இந்த அபராதத்தை செலுத்தாத போட்டியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்