பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்த அமீர் - பாவனி ரெட்டி ஜோடிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பிரதீப் குமாருடன் திருமணம்:
பாசமலர் தொடரில் நடித்துக்கொண்டிருந்த போது தான் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாருடன் காதல் வயப்பட்டார். அப்போது 2016 நவம்பரில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின்னர் கடந்த 2017 ஆண்டுப்பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு பிரதீப் குமார் மற்றும் பாவனி இருவரும் ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டனர் ,ஆனால், திருமணமான மூன்றாவது மாதத்திலேயே பிரதீப் குமார் திடீரென தற்கொலை செய்துக்கொண்டது அதிர்ச்சியை கொடுத்தது,
அந்த துயர சம்பவத்திலிருந்து மீண்டு வர பாவனி சினிமா மற்றும் சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இந்த நிலையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸில் மலர்ந்த காதல்:
பவானி விஜய் டிவியில் ஓளிப்பரப்பான சின்னத்தம்பி, பாசமலர் போன்ற சீரியல்களின் மூலம் பிரபலமானார்அதேபோல், அமீர் ஒரு திறமையான மற்றும் துடிப்பான நடன இயக்குனர்-நடனக் கலைஞர். அவர்களின் காதல் கதை மிகவும் எதிர்பாராத இடங்களில் தொடங்கியது அது எங்கு என்றால் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் வீட்டில் தான்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இல் பவானி ஆரம்ப போட்டியாளர்களில் ஒருவராக இருந்தபோதிலும், அமீர் பின்னர் வைல்ட் கார்டு என்ட்ரியாக சேர்ந்தார். அவர் நுழைந்த தருணத்திலிருந்தே, பவானி மீதான தனது பாசத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தினார். அமீரின் துணிச்சலான திருமண ப்ரோபோசலும், நிகழ்ச்சியின் ஊடாக இந்த ஜோடியின் உணர்ச்சிபூர்வமான பயணமும் அவர்களை ரசிகர்களின் விருப்ப ஜோடியாக மாற்றியது.
அதற்கு பிறகு இருவரும் இணைந்து பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக வெற்றியும் பெற்றனர்.
திருமண தேதி அறிவிப்பு:
பாவனி மற்றும் அமீர் இருவரும் லிவிங் டூகெதராக வாழ்ந்து வந்த நிலையில் இப்போது தங்களது காதல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாக அறிவித்தனர். கிட்டத்தட்ட 3 ஆண்டு கால காதல் வாழ்க்கைக்கு பிறகு கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தங்களது திருமண தேதியை அறிவித்தனர். அதன் ஏப்ரல் 20 ஆம் தேதி அவர்களின் திருமணம் நடைப்பெறும் என்று அறிவித்தனர்.
விமர்சையாக நடந்த திருமணம்:
இந்த நிலையில் அமீர் -பாவனி ஜோடிக்கு இன்று திருமணம் கோலகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்திற்கு விஜய் டிவி பிரபலம் ப்ரியங்கா தான் முன்னிறுந்து நடத்தி வைத்துள்ளார். தனது கணவருடன் கலந்துகொண்ட பிரியங்கா நாத்தனார் முடிச்சையும் கட்டியுள்ளார். தாலி கட்டும் நேரத்தில் அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அமீர் மற்றும் பாவனி ஜோடிக்கு பலதரப்பட்ட ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்