தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக உலா வந்தவர் சிம்ரன். 90, 2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 கதாநாயகியாக உலா வந்த சிம்ரன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், சரத்குமார், முரளி, பிரபுதேவா, அர்ஜுன் என அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கும் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது குறைவான அளவிலே படங்களில் நடித்து கவுரவ வேடத்தில் நடித்து வருகிறார்.
சிம்ரனை சீண்டிய சக நடிகை:
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிம்ரனுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதைப் பெற்றுக்கொண்ட சிம்ரன், சமீபத்தில் நான் என்னுடைய சக நடிகைக்கு உங்களை இந்த கதாபாத்திரத்தில் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றேன். அதற்கு அவர் உடனடியாக ஆண்ட்டி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இது எவ்வளவோ மேல் என்று பதில் அளித்திருந்தார். அறிவில்லாத பதில் அது. நிச்சயமாக நான் அந்த பதிலை எதிர்பார்க்கவில்லை.
எனக்கு இன்னும் நல்ல பதில் கிடைத்து இருக்க வேண்டும். இதுபோன்ற டப்பா ரோல் செய்வதற்கு பதில் கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற கதாபாத்திரங்கள் வந்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜோதிகாவா?
தற்போது சிம்ரன் குறிப்பிட்ட அந்த நடிகை யார்? என்று இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஒரு சில இணையவாசிகள் சிம்ரன் குறிப்பிட்டது ஜோதிகா என்று சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
ஏனென்றால், சிம்ரன் முன்னணி கதாநாயகியாக நடித்த காலத்தில் அவருக்கு நிகரான கதாநாயகியாக உலா வந்தவர் ஜோதிகா. ஏனென்றால் சமீபத்தில் டப்பா கார்டல் என்ற இந்தி வெப்சீரிஸில் ஜோதிகா நடித்துள்ளார். சிம்ரன் டப்பா என்று மறைமுகமாக ஜோதிகாவையே குறிப்பிட்டிருப்பதாக நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
அதேசமயம், சிலர் ஜோதிகாவையும் இதுபோன்று பதின்ம பருவ குழந்தைகளுக்கு தாயாக நடித்திருப்பதால் அவர் சிம்ரனை இவ்வாறு கூறியிருக்க வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
லைலாவா?
இன்னும் சிலர் சிம்ரன் நடிகை லைலாவை குறிப்பிட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று சில இணையவாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து பிரசாந்திற்கு நாயகியாக பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு வெளியான வதந்தி வெப்சீரிஸில் நடிகை லைலா தனது மகளுக்குத் தெரியாமல் தன்னை விட வயதில் குறைந்த இளைஞனுடன் தொடர்பில் இருப்பது போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுதொடர்பான விவாதத்தின்போது லைலா சிம்ரனை இவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் சில இணைய வாசிகள் தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் சில இணையவாசிகள் த்ரிஷா, நயன்தாரா ஆகியோர் சிம்ரனுக்கு இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அந்த நிகழ்ச்சியில் சிம்ரன் தனக்கு இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பிய நடிகை யார் என்று? தெரிவிக்கவே இல்லை.