Cool Suresh: ”பிரதீப் நீ போனதால உன்னைவிட அதிகமாக கவலைப்படுறேன்” - கேமரா முன்பு புலம்பிய கூல் சுரேஷ்

”பிரதீப் நீ போனதுக்கு உன்னை விட நான் தான் அதிகமாக கவலைப்படுறேன். உன்னை பர்சனலாக வெறுக்கவில்லை. உன்னை எனக்கு  மிகவும் பிடித்துள்ளது."

Continues below advertisement

Big Boss Tamil Cool Suresh: நீ போனதுக்கு உன்னை விட நான் தான் ரொம்ப வருத்தப்படுகிறேன் என பிரதீப் வெளியேற்றம் குறித்து கூல் சுரேஷ் பேசியுள்ளார். 

Continues below advertisement

கடந்த வாரம் எலிமினேஷனாக பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பவா செல்லதுரை, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, விசித்ரா, விஜய் வர்மா, மணி, விக்ரம், அனன்யா, ஐஷூ, ரவீணா, கூல் சுரேஷ், விஷ்ணு, பூர்ணிமா, மாயா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 

முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்டார். இரண்டாவது வாரத்தில் உடல்நிலை சரியில்லாததை காரணம் காட்டி பவா செல்லதுரை வெளியேறினார். அடுத்ததாக விக்ரம் வர்மா, யுகேந்திரன், வினுஷா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். இவர்களை தொடர்ந்து கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி மற்றும் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற அன்னபாரதி உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். இதில் பிரதீப் ஆண்டனியால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவர் தகாத வார்த்தைகள் பேசுவதாகவும், பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் போட்டியாளர்கள் குற்றம்சாட்டினர். 

இதற்கிடையே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக திரை பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் பிக்பாஸ் வீட்டில் இருந்த கூல் சுரேஷ், பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். கேமராவை பார்த்து பேசிய கூல் சுரேஷ், ”பிரதீப் நீ போனதுக்கு உன்னை விட நான் தான் அதிகமாக கவலபடுறேன். உன்னை பர்சனலாக வெறுக்கவில்லை. உன்னை எனக்கு  மிகவும் பிடித்துள்ளது. நீ பட்டம் வென்று இருப்பியான்னு தெரியவில்லை. ஆனால், நீ டஃப்பான போட்டியாளர். இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் வருவேன்னு நினைச்சேன். இவ்வளவு திறமை இருந்தும், நேரம்தான் எல்லாதுக்கும் காரணம். நீ போனது எனக்கு ரொம்ப மன வருத்தம். நமக்குள் முரண்பாடு இருந்தாலும், 2 நாளுக்கு முன்னாடியே போட்டியாளர்களிடம் பேசி இருக்கலாம். நான் பிடித்த முயலுக்கு 3 காலுன்னு நீ இருந்துட்ட. அது உன்னுடைய குணம்”  என கூறியுள்ளார். 

மேலும் படிக்க: Thug Life: வெற்றிக்கூட்டணியின் வெறித்தனமான THUG LIFE..! மிரட்டல் அடியுடன் டைட்டிலை அறிமுகம் செய்த கமல்ஹாசன்!

Entertainment Headlines: கமல்ஹாசன் - மணிரத்னத்தின் Thug Life.. ராஷ்மிகாவை பதறவைத்த வீடியோ.. சினிமா செய்திகள் இன்று!

 

Continues below advertisement
Sponsored Links by Taboola