பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஷிவின், விக்ரமன், அஸீம் என மும்முனைப்போட்டியில் ஒருவருக்கொருவர் சளைக்காத போட்டியாளர்களுடன் பிக்பாஸ் களம் சூடு பறக்க  காணப்படும் சூழலில், நாளை கிராண்ட் ஃபினாலே பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.


பிக்பாஸ் டைட்டிலை இந்த சீசனில் வெல்லப்போவது யார்? என இணையவாசிகள் ஒருபுறம் சூடு பறக்க விவாதித்து வரும் நிலையில், பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டவரும் பிரபல நகைச்சுவை நடிகையுமான ஆர்த்தி முன்னதாக அசீமைக் கேலி செய்தும் விக்ரமனுக்கு ஆதரவாகவும் ட்வீட் செய்துள்ளார்.


ஆர்த்தி கிண்டல்:


“ஷிவின் :எல்லாரிடமும் அமைதியா  பண்பா பேசிப் பழகும் நன்னடத்தை கொண்டவர், விக்ரமனும் அவரே ஜெய்கட்டும்னு சொல்லுவாங்க.


விக்ரமன் : ஷிவின் ஜெயிக்கிறதுனால அவங்க சமுதாயமே வெற்றியடையும்னு  விட்டுக்கொடுத்துருவாரு.
அசீம் தனக்கு கிடைக்கலைன்னா  பிக்பாஸையே உழுது  விட்ருவாறு உழுது” எனக் கேலியாக பதிவிட்டுள்ளார்.


விக்ரமனுக்கு வாழ்த்துகள்:


மேலும், ”மூன்று போட்டியாளர்களுமே சம அளவில் திறமையானவர்கள். ஆனால் இம்மூவரில் எதிர்காலத்தில் எந்த குணம் அனைவருக்கும் இருந்தால் நல்லா இருக்கும் என்பதை தமிழ் பேசும் நல் உலகம் வரவேற்க வேண்டும்.வெற்றி பெற செய்யும். விக்ரமனுக்கு வாழ்த்துகள்” எனத் தன் விருப்பமான போட்டியாளரான விக்ரமனுக்கு ஆதரவாகவும் பதிவிட்டுள்ளார் ஆர்த்தி.


 






 






ஆர்த்தியின் இந்தப் பதிவுகள் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன. 21 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டிகள், தடங்கல்கள், சண்டை சச்சரவுகளை தாண்டியும் இருந்து போட்டியாளர்களில் கதிரவன், அமுதவாணன் இருவரும் பணப்பெட்டியுடன் வெளியேறினர். இவர்களுக்கு அடுத்தபடியாக மைனா நந்தினியும் நேற்று நள்ளிரவு திடீரென பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.


தற்போது அசீம், விக்ரமன், ஷிவின் மூவரும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், நாளை மாலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.