இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின், 5ம் பாகம், சில நாட்களி் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான முன்னோட்டம், அறிவிப்பு என பிக்பாஸ் 5 தொடங்கும் முன்பே பரபரப்பான பேசு பொருளாக மாறியுள்ளது.



இதற்கிடையில் பிக்பாஸ் 5ல் யாரெல்லாம் பங்கேற்க உள்ளனர் என்கிற எதிர்பார்ப்பும், ஊகமும் பரவலாக உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பற்றிய தகவல்கள் தற்போது கசியத் துவங்கியுள்ளன.




அதில் முதல் போட்டியாளராக நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகளான திருநங்கை மிலா முதற் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது உறுதியான தகவல் என்றும் தற்போது வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 


ஷகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவரது வளர்ப்பு திருநங்கை மகளான மிலா வெளியில் தெரியவந்தார். சிறு வயதிலேயே அவரை தத்தெடுத்த ஷகிலா, தொடர்ந்து தன்னுடன் வளர்த்து வருகிறார். இதற்கிடையில் ஷகிலாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முயற்சிகள் நடந்ததாகவும், ஆனால் அவர் தான் தனது திருநங்கை மகளை பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் வரவிருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், மிலா தான் முதற்போட்டியாளராக தேர்வாகியுள்ளார் என்றும், மற்றவர்கள் தேர்வு பின்னர் தான் தெரியவரும் என்றும் ஒரு தகவல் தெரியவருகிறது. இந்நிலையில் மிலா வருகை குறித்து பிக்பாஸ் 5 என்கிற பெயரில் திடீரென முளைத்துள்ள அதிகாரப்பூர்வமற்ற பல சமூக வலைதள கணக்குகளில் மிலா பிக்பாஸ் வருகிறார் என்கிற பதிவு பகிரப்பட்டு வருகிறது.