Pushpa 2: புஷ்பா 2வில் அல்லு அர்ஜூனுடன் நடிக்கிறாரா பாலிவுட் பிரபலம்..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

புஷ்பா 2 பாடத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த மாதத்தின் இறுதியில் பெங்களூரில் தொடங்கப்பட உள்ளது.

Continues below advertisement

கடந்த 2021ம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் புஷ்பா : தி ரைஸ். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், சுனில், ஜெகதீஷ், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்தில் "ஊ சொல்றியா மாமா..." பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி பட்டி தொட்டி முதல் உலகளவில் பிரபலமானார் நடிகை சமந்தா.

Continues below advertisement

சந்தனக்கட்டை கடத்தலை மையமாக வைத்து இப்படம் தெலுங்கில் வெளியானதை தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என மற்ற மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பையும் சரியான வசூல் வேட்டையும் செய்தது. 

 

 

புதிதாக இணையும் பாலிவுட் பிரபலம்: 

புஷ்பா : தி ரைஸ் படத்தில் அபாரமான வெற்றிக்கு பிறகு தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா : தி ரூல் திரைப்படம் உருவாகி வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் புஷ்பா 2 படத்திற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அந்த வகையில் படத்தில் புதிதாக பாலிவுட் ஸ்டார் நடிகர் ஒருவர் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. புஷ்பா படத்தில் இயக்குனர் சுகுமார் முக்கியமான பாலிவுட் ஸ்டார் நடிகரை சேர்க்க முடிவெடுத்துள்ளார். அது கான் நடிகர்களில் ஒருவராக இருக்கலாம் அல்லது அஜய் தேவ்கன் இல்லையென்றால் வேறு யாரவது ஒரு ஸ்டார் நடிகர் இணைவார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.  

மனோஜ் பாஜ்பாய் மறுப்பு:

கடந்த ஆண்டு மனோஜ் பாஜ்பாயை புஷ்பா 2 படத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நடிகர் மனோஜ் பாஜ்பாய் இது குறித்த அறிக்கைகளை மறுத்தார். இந்த தகவல்கள் 'தவறானவை' என்றும் அது 'உண்மையில்லை பொய்' என்றும் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெங்களூரில் தொடங்கும் படப்பிடிப்பு: 

புஷ்பா 2 திரைப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்தின் இறுதியில் பெங்களூரில் தொடங்கப்பட உள்ளது என்ற செய்தி ஒன்று பிரபலமான நாளிதழ் ஒன்றில் வெளியாகியிருந்தது. இப்படப்பிடிப்பில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் பாசில் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.     

அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷல் :

மேலும் ரசிகர்கள் இந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக புஷ்பா : தி ரூல் படத்தின் டீசர் நடிகர் அல்லுஅர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 8ம் தேதி வெளியாகும் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. படத்தின் மைய கதைக்களத்தை காட்சிப்படுத்தும் விதமாக மூன்று நிமிட காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola