லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தமிழில் மாபெரும் வெற்றிபெற்ற ‘கைதி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘போலா’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.


போலா


அஜய்தேவ்கன் நடிப்பு மற்றும் இயக்கத்தில், மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர் நரேனின் கதாபாத்திரம் பெண் கதாபாத்திரமாக மாற்றப்பட்டு அதில் தபு நடித்துள்ளார். நடிகை அமலா பால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரவி பஸ்ரூர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.


சில வாரங்களுக்கு முன் போலா படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், இணையத்தில் இந்த ட்ரெய்லர் தமிழ் சினிமா ரசிகர்களின் கேலிக்கு ஆளானது.


ட்விட்டர் ரிவியூ:


கைதி படத்திலிருந்து மாறுபட்டு பைக் ஸ்டண்ட் உள்ளிட்ட காட்சிகள் செருகப்பட்டு வேறு படட்தின் ரீமேக் போல் ட்ரெய்லர் காட்சி அளிப்பதாக லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள போலா படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்துள்ளதா, கைதி கார்த்திக்கு சமமாக அஜய் தேவ்கன் மாஸ் காட்டியுள்ளாரா, ட்விட்டர்வாசிகள் சொல்வது என்ன எனப் பார்க்கலாம்!


 


 


























கைதி படத்தின் இந்தி ரீமேக்கான போலா படத்தின் திரைக்கதை நன்றாக இருப்பதாகவும், அஜய் தேவ்கன் வழக்கம்போல் அதிரடி ஆக்‌ஷனில் மாஸ் காட்டியுள்ளதாகவும், மறுபுறம் போலா திரைப்படம் கைதி படத்தின் கால் தூசுக்கு சமமில்லை, அஜய் தேவ்கன் கைதி போன்ற கல்ட் க்ளாசிக் படத்தைக் கொன்றுவிட்டார் என்றும் ட்விட்டர்வாசிகள் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். வரும் நாள்களில் போலா படம் என்ன மாதிரியான வரவேற்பை திரையரங்குகளில் பெறுகிறது எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்!