பாலிவுட் சினிமாவின் நகைச்சுவை நடிகராகவும் , பிரபல தொகுப்பாளராகவும் இருந்து வருபவர் நடிகை பாரதி சிங். சமீபத்தில் குழந்தை பிறந்தவுடன் சில நாட்களில் வேலைக்கு திரும்பியதற்காக பாராட்டப்பட்டார், விமர்சிக்கவும்பட்டார். மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பாரதி சிங் தற்போது தனது சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பாரதி சிங் தொகுத்து வழங்கும் காமெடி ஷோவானது Shemaroo ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பிரபலங்களுடன் நகைச்சுவையாக பாரதி சிங் கலந்துரையாடுவார். இந்த நிகழ்ச்சிக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது. மத உணர்வை புண்படுத்தியதாக கூறப்படும் , அந்த குறிப்பிட்ட எபிசோடின்பொழுது நடிகை ஜாஸ்மின் பாசினில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.அவருடன் பேசிய பாரதி சிங் , தாடி மீசை குறித்த பேச்சு வரும் பொழுது வழக்கமாக தனது நகைச்சுவை பாணியில் அதனை கேலியாக பேச தொடங்கிவிட்டார். " தாடி , மீசை வைத்திருந்தால் என்ன தப்பு. அதனால் பல நன்மைகள் உண்டு. தாடி வைத்திருந்தால் பால் குடித்துவிட்டு , தாடியை வாயில் போட்டுக்கொண்டால் (பாயாசம் ) ஸ்வீட் போல இருக்கும் . எனது நண்பர்கள் பலருக்கும் தாடி, மீசை இருக்கிறது. பெண்கள் நீண்ட தாடி வைத்திருக்கும் நபரை திருமணம் செய்துக்கொண்டால் நாள் முழுவது , பேன் பார்த்து தங்களது பொழுதை கழிக்கலாம் "என்றார்.
என்னதான் பாரதி இதனை நகைச்சுவைக்காக கூறியிருந்தாலும் கூட , சீக்கியர்கள் தங்கள் மதத்தில் பெருமையாக கருதுவது தாடி , மீசையைத்தானே !அதனை எப்படி கேலி செய்து பேசலாம் என பல எதிர்வினைகளை அவர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்க்கொண்டார். இந்த நிலையில் தான் அப்படியாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டு பாரதி வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
அதில் "கடந்த இரண்டு நாட்களாக பலரும் எனக்கு குறிப்பிட்ட வீடியோவை பகிர்ந்து வருகிறீர்கள். அதில் நான் தாடி மீசையை வைத்திருப்பவர்களை கிண்டல் செய்திருப்பதாக கூறுகிறீர்கள்.டியோவை நன்றாக பாருங்கள். நான் ஏதாவது மதத்தை குறிப்பிட்டு கூறியிருக்கின்றானா என்று.நான் பஞ்சாப்பை சேர்ந்த மக்களை குறிப்பிட்டு அந்த வீடியோவில் கிண்டல் செய்திருக்கிறேனா..எனது நண்பர்களுடன் ஜாலியாக பேசியது. இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் எல்லோருமே தாடி மீசை வைத்துக்கொள்கிறார்கள். நான் பேசியது ஏதாவது ஒரு சாதியினரையோ , மதத்தினரையோ காயப்படுத்தியிருந்தால் கையெடுத்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ஒரு பஞ்சாபி, அமிர்தசரஸில் பிறந்தேன், நான் எப்போதும் பஞ்சாபின் மரியாதையைக் காப்பேன், பஞ்சாபியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்" என கூறியுள்ளார்.