மனோஜ் பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மரணம் திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இதய சிகிச்சை சென்று வீடு திரும்பிய மனோஜூக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு அவர உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியானது. அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். மனோஜின் உடல் இன்று மாலை சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.  தனது மகனின் உடலைப் பார்த்து பாரதிராஜா கதறி அழுத வீடியோ பலரது இதயத்தை கலங்கடித்துள்ளது. மகனைப் பார்த்து பாரதிராஜா கதறி அழுது கீழ் விழப்போனார். அருகிலிருந்தவர்கள் சுதாரித்ததால் அவர் கீழே விழவில்லை. 

இளையராஜா மகள் பவதாரிணி

கடந்த ஆண்டு இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்று நோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தனது குழந்தைமையான குரலால் பல இனிமையான பாடல்களை பாடிய பவதாரிணி இலங்கையில் புற்று நோய்க்கு சிகிச்சை எடுக்க சென்றிருந்தார் . சிகிச்சை முடிந்து மீண்டு வருவார் என பலர் எதிர்பார்த்த நிலையில் அவரது இறப்பு செய்தி வந்து சேர்ந்தது. மகளின் இறப்பு இளையராஜாவை பெரியளவில் பாதித்தது. என மகள் பவதாரிணி உயிரோடு இருக்கும்போது என் கவனம் முழுவதும் இசை மீதுதான் இருந்தது. இசை மீது இருந்த ஆர்வத்தால் குழந்தைகளை கவனிக்காமல் விட்டது வருத்தமளிக்கிறது என இளையராஜா வேதனை தெரிவித்திருந்தார்

விஜய் ஆண்டனி மகள்

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு மற்றொரு அதிர்ச்சிகரமான நிகழ்வு. 16 வயதேயான மீராவின் இழப்பால் விஜய் ஆண்டை பெரிதும் பாதிக்கப்பட்டார். இந்த துன்பகரமான நிகழ்வில் இருந்து தன்னை மீட்டெடுத்து பாசிட்டிவாக இருந்து வருகிறார். 

பிரபுதேவா மகன்

நடிகர் பிரபுதேவா மற்றும் அவரது மனைவி லதாவுக்கும் மூன்று குழந்தைகள் இருந்தனர். இதில் மூத்த மகனான பசவராஜூ சுந்தரம் கடந்த 2008 ஆம் ஆண்டு புற்று  நோய் பாதிப்பால் உயிரிழந்தார்

விவேக் மகன்

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேகின் மகன் 2015 ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் உயிரிழ்ந்தது பலரது இதயத்தை கனக்க செய்த ஒரு நிகழ்வு

பாலச்சந்தர் மகன் 

இயக்குநர் பாலச்சந்தரின் மூத்த மகன் பால கைலாசம் கடந்த 2014 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்த நிகழ்வு திரையுலகில் பெரிய அதிச்சியை ஏற்படுத்தியன் நிகழ்வுகளில் ஒன்று.