விஜய் டிவியின் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதால் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்து வருகிறது.
நேற்றைய எபிசோடில் கண்ணம்மாவும் பாரதியும் மீண்டும் ஒன்று சேர போகிறார்கள் என்ற எரிச்சலில் வெண்பா கோபமாகி இது உண்மையான டிஎன்ஏ ரிப்போர்ட் கிடையாது. இரண்டு முறை நீ டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து உன்னால் குழந்தை பெற்று கொள்ள முடியாது என ரிசல்ட் வர, இப்போது மட்டும் எப்படி ரிசல்ட் பாசிட்டிவாக என வரும். இது பொய்யான ரிசல்ட். யாரோ இதை மாற்றியிருக்கலாம் என் குட்டையை குழப்ப ஆரம்பிக்கிறார். இதனால் மீண்டும் குழப்பத்திற்கு ஆளாகிறார் பாரதி. அத்துடன் நேற்றைய எபிசோட் நிறைவடைந்தது.
இன்றைய எபிசோடில் சௌந்தர்யா எங்கள் குடும்பத்து விஷயத்தில் தலையிட நீ யார் யார் என வெண்பாவிடம் கேட்டு விட்டு கண்ணம்மா வா நம்முடைய வீட்டிற்கு போகலாம் என கூறுகிறார். உடனே கண்ணம்மா கொஞ்சம் இருங்க அத்தை இவ்வளவு நேரம் மிகவும் பளிச்சென இருந்த இவரோட முகம் வெண்பா சொன்ன பிறகு அப்படி சுருங்கி விட்டது. வீட்டிற்கு சென்ற உடன் மீண்டும் லாஜிக் பேசுவாரு. அதனால எல்லாத்தையும் இங்கேயே முடித்துக்கொண்டு தெளிவு வந்த பிறகு போகலாம் என கூற, உடனே பாரதி நான் எதுவம் பேச மாட்டேன் வாங்க வீட்டுக்கு போகலாம் என்று கூறுகிறார். உடனே வெண்பா அப்படியெல்லாம் விட மாட்டேன். நான் சொன்னதுல ஏதாவது தப்பு இருக்கா.. நீங்க யாராவது சொல்லுங்க என சொல்ல, உடனே அங்கே ஆஜராகிறது செல்வம் கதாபாத்திரம். நீங்க எவ்வளவு நல்ல டாக்டர் இலவசமா சிகிச்சை எல்லாம் பாக்குறீங்க ஆனா இந்த வெண்பா நல்லவங்க கிடையாது.
என்ன மன்னிச்சுடுங்க சார். அன்னிக்கு வெண்பா என்கிட்டே பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து ரிப்போர்ட்ட மாத்தி வைக்க சொன்னாங்க எனும் விஷயத்தை உடைக்கிறார் செல்வம். உடனே வெண்பா இவன் யார் என்றே எனக்கு தெரியாது, இவன் சொல்றத எல்லாம் நம்பாதே என நாடகத்தை ஆரம்பித்துவிட்டார். உனக்கு யார் பணம் கொடுத்து இப்படி பேச சொன்னாங்க. நான் தான் உன்ன அப்படி செய்ய சொன்னேன் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கா என சொல்ல உடனே நான் இருக்கிறேன் என என்ட்ரியாகிறார் துர்கா.
மீதி கதையை துர்கா உடைக்கிறார். கண்ணம்மா பாரதிக்கு துரோகம் செய்துவிட்டாள். அதனால் பாரதி தான் கண்ணம்மாவை கொலை செய்ய சொன்னான் என கூறி, பணத்தை கொடுத்து என்னை கூலிப்படையாக வீட்டிற்குள் அனுப்பினாள். ஆனால் நான் கண்ணம்மா மிகவும் நல்லவள் என்பதையும், பாரதி கொலை செய்ய என்னை அனுப்பவில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன். பிறகு கண்ணம்மாவிற்கு காவல்காரன் ஆனேன். பல முறை வெண்பா கண்ணம்மாவை கொலை செய்ய முயற்சி செய்தாள்.
அனைத்து உண்மைகளையும் அறிந்த வெண்பாவின் சித்தப்பாவையும் அவள் கொலை செய்து விட்டாள். கண்ணம்மாவை காப்பாற்றியதால் என்னை அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். அங்கு இருந்து தப்பிக்கும் போது தான் என்னுடைய ஒரு காலை நான் இழந்தேன். இப்போது தான் வடமாநிலத்தில் இருந்து உண்மையை சொல்வதற்காக இங்கு வந்தேன். இதையெல்லாம் கேட்ட அதிர்ச்சியில் உறைந்த பாரதி ஏன் வெண்பா என்னோட வாழ்க்கையை இப்படி பண்ண. நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன் என மிகவும் கோபமாக கேட்க, வெண்பா சிரித்து கொண்டே இருக்கிறாள். அவள் சிரிப்பதை பார்த்த பாரதிக்கு கோபம் தலைக்கு மேல் ஏறுகிறது. இத்துடன் இந்த எபிசோட் நிறைவடைந்தது.