பானுப்பிரியா :


இயல்பான எதார்த்தமான நடிப்பு , பட படக்கும் பேச்சு ,கண்களை உருட்டி உருட்டி பேசும் தொணி , அழகான முகம் என கோலிவுட்டின் 80 களில் பலரின் ஃபேவெரெட் நாயகியாக வலம் வந்தவர் நடிகை பானுப்ரியா. பள்ளிப்பருவத்திலேயே பரதநாட்டிய கலைஞராக திகழ்ந்த பானுப்பிரியா தனது 17 வயது வயதில் மெல்ல பேசுங்கள் என்னும் திரைப்படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு 1983 ஆம் ஆண்டு வெளியான சித்தாரா என்னும் திரைப்படம் பானுப்ரியாவின் மார்க்கெட்டை உயர்த்தியது.






முதல் பட அனுபவம் :


பானுப்ரியா முதன் முதலில் நடித்த மெல்ல பேசுங்கள் திரைப்படத்தில் அவருக்கு பரதக்கலை மிகவும் கைக்கொடுத்ததாக கூறுகிறார். ஏனென்றால் முதல் படத்தில் அவரது நடிப்பிற்கு முக பாவனைகள் அதிகம் தேவைப்பட்டதாம் . அதனால் தனக்கு எதுவும் சிரமமாக தெரியவில்லை என்கிறார். இரண்டாவது படமான சித்தாராவில் சில இடங்களில் பானுப்ரியா முதல் படத்தினை போலவே  பாவங்களை மிகைப்படுத்திவிட்டாராம். அந்த சமயத்தில் இயக்குநர் வம்சி , தனக்கு வழிக்காட்டியாக இருந்து எப்படி நடிக்க வேண்டும் என கற்றுக்கொடுத்தார் என பானுப்ரியா தெரிவித்துள்ளார். உண்மையில் சிறந்த பரதநாட்டிய கலைஞரான பானுப்ரியா இன்னும் அரங்கேற்றம் கூட செய்யவில்லை. ஆனால் அப்போது அவருக்கு இருந்த திறமையால் , அரங்கேற்றம் செய்யாமலே இவரது குரு பானுப்பிரியா மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் களம் காண செய்திருக்கிறார்.







தமிழ் சரளமாக பேச காரணம் ?


ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியில் பிறந்து , அங்குள்ள பள்ளியில் படித்தவர் நடிகை பானுப்பிரியா. ஆனால் முதல் படத்திலேயே தமிழை சரளமாக பேசினார்.அது எப்படி என கேட்ட பொழுது , எனது பள்ளியில் இரண்டாவது மொழியாக நான் தமிழை எடுத்து படித்தேன். செந்தமிழ் மீது எனக்கு ஈர்ப்பு .அதில் இருக்கும் இலக்கிய பாடல்கள் எனக்கு பிடிக்கும் , சில பாடல்களை நான் பாடுவேன் என்றார்.தனது மகளையும் கூட தமிழ் மொழியை எடுத்து படிக்குமாறு அறிவுரை கூறினாராம் ஆனால் அவர் இந்தியை தேர்வு செய்து படித்தார் என்கிறார் .







திருமணம் :


பானுப்ரியா பீக்கில் இருக்கும் பொழுதே திருமணம் செய்துக்கொண்ட நடிகைகளுள் ஒருவர் .அமரிக்காவைச் சேர்ந்த விருதுபெற்ற புகைப்படக்கலைஞரும், பிரபல பரதநாட்டிய கலைஞரான சுமதி கவுசலின் மகனுமான ஆதர்ஷ் கவுசல், என்பவரை பானுப்ரியா திருமணம் செய்து கொண்டார்.பானுப்ரியா அமெரிக்காவில் செட்டில் ஆனார். தங்கை தனக்கு முன்னதாக திருமணம் செய்துக்கொண்டதால் தனக்கும் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது என்றும் அதனால் நான் சினிமாவிற்கு பிரேக் எடுத்தது ஒருபோதும் தனக்கு வருத்தமாக இல்லை என்கிறார். கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் எடுக்கப்பட்ட  நேரத்தில் பானுப்ரியாவின் கணவர் மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.