விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடரின் நாயகி பாக்கியாவின் அப்பாவித்தனமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பாலும், விறுவிறுப்பான திரைக்கதையாலும் பாக்கியலட்சுமி நாடகம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலே நம்பர் 1 சீரியலாக உள்ளது,


இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலின் நாயகி சுசித்ராவுக்கு திரைப்பட வாய்ப்பு மீண்டும் வந்துள்ளது. தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் புதிய படமொன்றில் நடிக்க சுசித்ராவுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. பிரபல நடிகரும், இயக்குனருமாகிய நடனப்புயல் பிரபுதேவா இந்த படத்தில் நடிக்கிறார்.




அவருக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சுசித்ரா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்கியலட்சுமி நாயகி வெள்ளித்திரையில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாக்கியலட்சுமியின் நாயகியாக நடித்து வரும் சுசித்ரா தன்னுடைய திரை வாழ்க்கையை 14 வயதிலே தொடங்கியவர்.


கர்நாடகாவைப் பூர்வீகமாக கொண்ட சுசித்ரா 1984ம் ஆண்டு பிறந்தவர். கன்னடத்தில் வெளியான உபேந்திராவின் ஏ என்ற படத்தின் மூலமாக நடிகையாக முதன்முறையாக அறிமுகமானார். பின்னர், ஒன்மேன் ஆர்மி, மஞ்சுநாதா, காட்பாதர், சிவா, பீமா. கிரேசி ஸ்டார் போன்ற பல கன்னட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான எஜமான் என்ற கன்னட படத்தில் நடித்தார்.




இருபதிற்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்த சுசித்ரா உதயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மனே தன' என்ற தொடர் மூலம் கன்னட சின்னத்திரையில் அறிமுகமானார். காவியா அஞ்சலி, ராதாரமணா, மாங்கல்யா, ஈஸ்வரி போன்ற கன்னட தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த சுசித்ரா, தெலுங்கில் சீரியல்களில் நடித்தார். தமிழில் 2008ல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நாணல்' என்ற தொடரில் அறிமுகமானார். பின்னர், பாக்கியலட்சுமி தொடரில் தற்போது நடித்து வருகிறார்,


2014ம் ஆண்டு தமிழில் வெளியான சைவம் படத்தில் சுசித்ரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : AK61 Update : போனி கபூருடன் ஒரு மீட்.. AK 61 அப்டேட் கொடுத்தாரா ஐஷ்வர்யா ரஜினிகாந்த்..? இதைப் படிங்க


மேலும் படிக்க : Sun Kudumba Rasi Palan: சீரியல் நாயகிகளின் இந்த வார ராசிபலன்... வெளியிட்டது பிரபல தொலைக்காட்சி... சிரிப்பை அடக்கவே முடியல!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண