எப்படி மூனு பிள்ளை பெத்தீங்க? படார் கேள்விக்கு பாக்கியலட்சுமி ஹீரோ சதீஷ் கொடுத்த பதிலடி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

Continues below advertisement

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 போன்ற சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விதமாக பாக்கியலெட்சுமி சீரியல் கதைக்களம் நகர்ந்துவருகிறது.

Continues below advertisement

அப்பாவியான குணத்தைக்கொண்ட பாக்யாவாக நடிகை சுதித்ராவும், ஏமாற்றும் கணவர் ரோலில் நடிகர் சுதிசும் நடித்து வருகின்றனர். கணவர் என்ன சொன்னாலும் தட்டாமல் கேட்கும் மனைவி பாக்யலெட்சுமி,

இதனால் மிகுந்த அவமானங்களைச் சந்திக்கிறது. இந்நிலையில் தான் வாழ்க்கையில் எப்படியாவது தனது சொந்த உழைப்பில் முன்னேற வேண்டும் என்ற முனைப்போடு கேட்ரிங் தொழில் மேற்கொண்டு வருகிறார்.
இப்படி கதைக்களம் நகர்ந்துக்கொண்ட நிலையில் தான் பாக்யலெட்சுமியின் கணவர் கோபி தனது கல்லூரி காதலியான ராதிகாவை 2 வது திருமணம் செய்துக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இருவருக்கும் இருந்த உறவு குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

நெட்டிசன்கள் கேள்வியும் சதீஷின் பதிலும்:

லேட்டஸ்ட் எபிசோடில் கோபி விபத்தில் சிக்குகிறார். அவரை பார்க்க மருத்துவமனைக்கு செல்லும் ராதிகா தன்னை கோபியின் மனைவி என அறிமுகப்படுத்தி கொள்கிறார். அதனைப் பார்த்த பாக்யா அதிர்ச்சியாகிறார்.
இந்நிலையில் பாக்யலக்‌ஷ்மி சீரியல் ரசிகர்கள் நடிகர் சதீஷிடம் ஒரு கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு சதீஷ் அளித்துள்ள பதிலில்,  "திருமணம் ஆகும் போது கோபிக்கு 24 வயது, பாக்யாவுக்கு என்ன வயது.. ரைட்டர் சொல்லவில்லை.. நான் எதாவது வயது சொல்லி சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை.

கோபிக்கு அந்த வயதில் உடல் தேவைகள் இருந்திருக்கும், அதனால் மூன்று குழந்தைகள் பாக்யாவுடன் பெற்று இருக்கலாம் என நினைக்கிறேன்" என நடிகர் சதிஷ் தெரிவித்து இருக்கிறார். மேலும் இது சீரியல், நான் நடிகர், கொடுத்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன், அதனால் என்னை திட்டாதீர்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். சதீஷின் பதிலை சிலர் வரவேற்றுள்ளனர். இன்னும் சிலர் இது சமாளிப்பு என அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.


பாக்யலக்‌ஷ்மி சீரியல் நடிகர்களை இப்படி வம்பிழுப்பது நெட்டிசன்களுக்கு இது முதன்முறையல்ல. கணவர் மீது சிறு சந்தேகம் கூட கொள்ளாமல் பழைய பஞ்சாங்க மனைவியாக இருந்த பாக்யாவை நெட்டிசன்கள் கேலி செய்தனர். பாக்யலெட்சுமி எதுவும் தெரியாமல் இருந்தது ரசிகர்களை மிகுந்த கோபத்தில் ஆழ்த்தியது. அதனாலேயே கோபியின் மீது சந்தேகம் கொள்வதுப்போன்றும், மகன் செழியின் அப்பாவின் நடத்தையை தெரிந்துக்கொள்வது போன்று சீரியல் மாற்றப்பட்டது. இப்போது சதீஷை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர் நெட்டிசன்கள்.

பாக்யல்க்‌ஷ்மி சீரியலைப் போல் அதன் ப்ரோமோவுக்கும் அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

Continues below advertisement