Por Teaser: நேருக்கு நேர் மோதும் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராமன்: வெளியானது போர் படத்தின் டீஸர்!

அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடித்து உருவாகியுள்ள போர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

Continues below advertisement

அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடித்து பிஜாய் நம்பியார் இயக்கியுள்ள போர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Continues below advertisement

பிஜாய் நம்பியார்

 வெகு நீண்ட இடைவெளிகளுக்குப் பின் படங்களை இயக்குபவர் பிஜாய் நம்பியார். இவர் இயக்கிய டேவிட் படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் வெளியானது.  தமிழில் இப்படத்தில் விக்ரம் , ஜீவா, தபூ, உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். இதற்கடுத்ததாக துல்கர் சல்மான் நடித்த  சோலோவை இயக்கினார். பல்வேறு கதாபாத்திரங்கள் அவர்களின் வெவ்வேறு வாழ்க்கையை ஒரே சரடில் இணைக்கும் விடமாக இவரது படங்கள் அமைந்துள்ளன.  நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட நவரசாவின்  முதல் படமான எதிரியை இயக்கியிருந்தார்.  இதனைத் தொடர்ந்து அமேசான் பிரைம் வெளியிட்ட ஸ்வீட் காரம் காஃபியில் ஒரு பகுதியை இயக்கினார்.  தற்போது இவர் இயக்கியுள்ள படம் போர். அர்ஜூன் தாஸ் , காளிதாஸ் ஜெயராம், சஞ்சனா நடராஜன், டி.ஜே பானு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் இந்தப் படம் எடுக்கப் பட்டிருக்கிறது. தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

டீசர்

அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவருக்கு இடையிலான மோதலே இந்த கதையின் மையமாக இருக்கிறது. இந்தப் படத்தின் டீசரை நடிகர் அர்ஜுன் தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகிய இரு நடிகர்களும் தங்களது முதல் படத்தில் இருந்தே பெரியளவில் வரவேற்பைப் பெற்ற நடிகர்கள் என்று சொல்லலாம். ஆனால் தொடர்ச்சியாக இவர்களுக்கு பெரிய வெற்றிப் படங்கள் அமையவில்லை. காளிதாஸ் ஜெயராம் பாவக் கதைகளில் நடித்த தங்கம் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த நட்சத்திரம் நகர்கிறது படம் குறிப்பிடத் தகுந்த வெற்றிபெற்றது. அதே  நேரத்தில் அர்ஜூன் தாஸ் நடித்து வெளியான அநீதி படம் பெரியளவில் பாராட்டப் படவில்லை. இந்தப் படம் இருவருக்கும் ஒரு தனித்துவமான அடையாளத்தை பெற்று தரும் என்று எதிர்பார்க்கலாம்.  குறிப்பிட்டு சொல்லும் படியான மற்றொரு நபர் சஞ்சனா நடராஜன். பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இவருக்கான முழு அங்கீகாரம் இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola