நெட்ப்ளிக்ஸ் கொரியத் திரைப்படங்களின் மேல் 2.5 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.உலகம் முழுவதும் இருக்கும் நெட்ப்ளிக்ஸின் 233 மில்லியன் வாடிக்கையாளர்களில் 60 சதவிகிதம் பேர் கொரிய சீரிஸ்களைப் பார்ப்பதாக தகவல் வெளியிடப்பட்டது.  கொரியத் திரைப்படங்கள் மற்றும் கொரிய வெப் சீரிஸ்கள் இந்திய ரசிகர்களிடையே பெரும் புகழை அடைந்திருக்கின்றன. நாம் பார்ப்பதற்கு இணையத்தில் எக்கசக்கமனா கொரியத் திரைப்படங்கள் கொட்டிக் கிடக்கின்றன.இத்தகைய சூழலில் ஒரு நல்ல பரிந்துரை உங்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும் நெட்ப்ளிக்ஸில் நீங்கள் பார்க்கக்கூடிய கொரிய சீரிஸ்கள் பற்றிய ஒரு சின்ன பட்டியல் இது.


தி கிளோரி (2010)


தனது  இளம் பருவத்தில் தனது சக  மாணவர்களால் கடும்  கேலிசெய்யப்பட்டு  கொடுமைகளுக்கு உள்ளான ஒரு பெண் பல ஆண்டுகள்  திட்டங்களை உருவாக்கி அவர்களை பழிவாங்கும் ஒரு பெண்ணின் கதை தி கிளோரி. கடந்த மார்ச் மாதத்தில் உலகம் முழுவதிலும் 90 நாடுகளில்  உள்ள பார்வையாளர்களால் அதிகம் பார்க்கப்பட்ட சீரிஸ் தி  க்ளோரி.இந்த சீரிஸ் மொத்தம் 16 எபிசோட்களைக் கொண்டது.இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டது.


இந்த சீரிஸ் தென் கொரிய நாட்டில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.பள்ளிகளில் சக மாண்வர்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.


பிசிகல் 100


9 எபிசோட்களைக் கொண்ட ரியாலிட்டி ஷோ பிசிகர் 100.கொரியாவைச் சேர்ந்த 100 விளையாட்டு வீரர்களைக் ஒன்றுசேர்த்து அவர்களுக்கு ஒரு சவால் முன்வைக்கப் படுகிறது.அதனை முடிப்பவர்கள் சிறந்த உடலைக் கொண்டவர்களுக்கான பட்டத்தை பெறுவார்கள். நமது ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு தொடர் இது.  அடுத்த சீசனிற்கான  அறிவிப்பை எதிர்பார்த்து காட்திருக்கிறார்கள் இதன் ரசிகர்கள்.


எக்ஸ்ட்ரா ஆர்டினரி அட்டார்னி வூ


நெட்பிளிக்ஸில் அதிகம் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்று இந்த தொடர்.ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் வழக்கறிஞரை மையக் கதாபாத்திரமாக கொண்டது இந்த தொடர். இந்தத் தொடர் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய தவறான புரிதலைக் கொண்டிருப்பதாக சிலர் விமர்சித்தார்கள்.அதே நேரத்தில் இந்த தொடர் மூலம் ஆட்டிஸம் குறித்த உரையாடல் அதிகரித்துள்ளதாக கருதுகிறார்கள்.மொத்தம் 16 எபிசோட்களைக் கொண்டது இந்தத் தொடர்.


ஆல்கெமி ஆஃப் சோல்ஸ்


கொரியன ஒடிஸ்ஸி,ஹொட்டல் டெல் லூனா போன்ற புகழ்பெற்ற கொரியன் தொடர்களை எழுதிய ஹாங் சகோதரிகள் எழுதிய  ஆல்கெமி ஆஃப் சோல்ஸ் மொத்தம் 3ஒ எபிசோட்களை  கொண்டது. இந்தத் தொடரின் கதை விளக்குவதற்கு சற்று கடினமானது.பழங்கால கொரிய நிலத்தில் வைத்து உருவாக்கப்பட்ட  ஒரு கற்பனை கதை என்று எளிமையாக இதைச் சொல்லலாம்.உங்களுக்கு ஹாரி போட்டர் மாதிரியான மாய உலகக் கதைகள் பிடிக்குமென்றால் இந்தத் தொடரும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்….