செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கொடூர தந்தையை நண்பர்கள் உதவியுடன் 17 வயது சிறுமி ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூருவின்  ஆத்தூர் லேஅவுட் பகுதியில்  46 வயதான  நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். 11 வயதான இளைய மகள் பள்ளிக்கு சென்று வருபவர். 17 வயதான மூத்த மகள் கல்லூரி முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த கொடூர தந்தை தன்னுடைய மூத்த மகளுக்கு வீட்டிலேயே செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்த அச் சிறுமி தன்னுடைய நண்பர்களின் உதவியை நாடியுள்ளார். அதன்படி தன்னுடைய அம்மா ஊருக்குச் சென்ற நேரம் பார்த்து நண்பர்கள் 4 பேரை வீட்டுக்கு அழைத்துள்ளார் சிறுமி. இரவு 12 மணிக்கு வீட்டில் கதவை அவர்கள் தட்டியுள்ளனர்.



செக்ஸ் டார்ச்சர் தந்தை.. நண்பர்களுடன் சேர்த்து சுத்தியால் அடித்துக்கொன்ற சிறுமி!


 அப்போது வீட்டில் இருந்த சிறுமியின் தந்தை கதவைத் திறந்துள்ளார். கதவைத் திறப்பதற்காக தயாராக இருந்த சிறுமியின் நண்பர்கள் கொடூர தந்தையில் தலையில் பலமாக பலமுறை சுத்தியலால் தாக்கியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார் தந்தை. உடனடியாக 4 பேரும் அந்த இடத்தில் இருந்து தப்பித்து ஓடியுள்ளனர். இந்த சத்தம் கேட்டு இளைய மகள் தூக்கத்தில் இருந்து கண் விழித்து சத்தமிட்டுள்ளார். எதுவும் தெரியாதது போல மூத்த மகளும் அலறியுள்ளார். இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடியுள்ளனர். 


உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் மர்ம நபர்கள் தாக்கியதாக கூறியுள்ளனர். ஆனால் தொடர் விசாரணையில் தந்தையை கொலை செய்தது தன் நண்பர்கள் தான் என அச்சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும், தன் தந்தை தொடர்ந்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததால் ஆத்திரம் அடைந்து நண்பர்கள் உதவியுடன் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டு உண்மைதான் எனசிறுமியின் தாயாரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 


கொலையில் ஈடுபட்ட 5 பேருமே சிறுவர்கள் என்பதால் அதற்கு ஏற்ப போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொடூர தந்தையை பெற்ற மகளே நண்பர்கள் உதவியுடன் அடித்துகொலை செய்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண