Actress Nabanita Das: கார் மீது மோதிய சரக்குவாகனம்; வாக்குவாதத்தில் விடுக்கப்பட்ட கொலைமிரட்டல்.. வைரல் வீடியோ!

மேற்கு வங்கத்தில் கார் மீது சரக்குவாகனம் மோதிய சம்பவத்தில் பிரபல டோலிவுட் நட்சத்திர தம்பதியினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

மேற்கு வங்கத்தில் கார் மீது சரக்குவாகனம் மோதிய சம்பவத்தில் பிரபல டோலிவுட் நட்சத்திர தம்பதியினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

கடந்த 2018 ஆம் ஆண்டு பெங்காலி மொழியில் வெளியான அர்த்தங்கினி மற்றும் 2019 ஆம் ஆண்டு வெளியான மஹாபீத் தாராபீத்  ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை நபனிதா தாஸ். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த இவர் 2019 ஆம் ஆண்டு நடிகர் ஜீது கமலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினர் டோலிவுட்டின் பிரபலமான நட்சத்திர தம்பதியாக வலம் வருகின்றனர். 

இதனிடையே மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள நிம்தா காவல் நிலையம் அருகே சரக்கு வாகனம் ஒன்று இந்த தம்பதியினர் சென்ற கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சரக்கு வாகனத்தின் ஓட்டுநரும்,அவரது உதவியாளரும் தன்னை பொதுவெளியில் வைத்து துன்புறுத்தியதோடு மட்டுமல்லாமல், இருவரையும் கொலை செய்வதாக மிரட்டல் விடுக்கின்றனர். இதுதொடர்பான வீடியோவை நபனிதா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

மேலும் போலீசார் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் நபனிதா குற்றம் சாட்டியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் அபனிகா தனது கணவர் ஜீது கமலுடன் சென்று போலீசில் புகாரளித்தார்.

அதனடிப்படையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து சரக்கு வாகனத்தின் உரிமையாளர் அபனிகா மற்றும் அவரது கணவர் ஜீது கமல் மீது பதிலுக்கு புகாரளித்தார். அதில் தன்னிடம் வேலை பார்க்கும் நபர்கள் தாக்கப்பட்டதாகவும், வாகனம் சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் டோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola