ஹாலிவுட்டின் பிரபல நடிகர் பென் அஃப்லெக்கின் 10 வயது மகன் சாமுவேல் சமீபத்தில் மஞ்சள் நிறத்திலான லம்போர்கினி எஸ்.யு.வி மாடல் கார் ஒன்றைத் தவறுதலாக ரிவர்ஸ் கியரில் பின்னோக்கி இயக்கியதில் வேறொரு வாகனத்தின் மீது மோதியுள்ளார். 


ஹாலிவுட்டின் பிரபல நடிகரான பென் அஃப்லெக் சமீபத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு, `பேட்மேன்’ என்ற சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்ததற்காக புகழ்பெற்றவர். மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்தும், இயக்கியும் உள்ளார். இந்நிலையில், தனது காதலியும், ஹாலிவுட் நடிகையுமான ஜெனிஃபர் லோபஸுடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள சொகுசு கார் வாடகை டீலர்ஷிப் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் நடிகர் பென் அஃப்லெக். அப்போது மஞ்சள் நிறத்திலான லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை இயக்கியுள்ளார் பென் அஃப்லெக்கின் 10 வயது மகன் சாமுவேல். 


நாள் ஒன்றுக்கு சுமார் 1475 அமெரிக்க டாலர்களை வாடகையாகப் பெறும் அந்தக் கார் தவறுதலாக ரிவர்ஸ் கியரில் இயக்கப்பட்ட போது, பின்னால் நின்றுகொண்டிருந்த வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ கார் மீது மோதியுள்ளது. இந்த லம்போர்கினி எஸ்.யூ.வி மாடல் காரின் ஒரு நாள் வாடகையின் இந்திய மதிப்பு சுமார் 1.15 லட்சம் ரூபாய் ஆகும். 



மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிசிடிவி வீடியோக்களைப் பார்வையிட்டதில், கார் மோதிய பிறகு, நடிகர் பென் அஃப்லெக்கின் மகன் சாமுவேல் காரில் இருந்து வெளியேறி, இரண்டு கார்களையும் பார்வையிட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து, அவரது தந்தை பென் அஃப்லெக் இரண்டு கார்களையும் பரிசோதித்துவிட்டு, விபத்துக்காக தனது மகனை ஆறுதல்படுத்தியுள்ளார். தன் மகனை பென் அஃப்லெக் அணைத்திருக்கும் படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 






தனது முன்னாள் மனைவி ஜென்னிஃபர் கார்னருடன் பிறந்த குழந்தைகளுள் சாமுவேல் இறுதியாகப் பிறந்தவர். இந்த ஜோடிக்கு ஏற்கனவே வயலர், செரஃபினா என்ற இரண்டு மகள்களும் உண்டு. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


Car loan Information:

Calculate Car Loan EMI