ஒரு சினிமா பிரபலம் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு மோகம் இருக்க தான் செய்யும். அதிலும் சூப்பர் ஸ்டார் என்றால் சொல்லவா வேண்டும். சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கோடி கணக்கில் இருந்தாலும் அவர் மீது வெறித்தனமான அன்பு வைத்திருப்பவர்களும் உண்டு. இது புறம் இருக்கையில் ஒரு பிரபலத்தின் குடும்பத்தார் படும் இன்னல்களும் சங்கடங்களும்  எத்தனை எத்தனையோ. 



ஐஸ்வர்யாவின் மனஅழுத்தத்தின் காரணம்: 


சூப்பர் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் மற்றும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது அவர் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது ஐஸ்வர்யா ஒரு பிரபலத்தின் மகளாக இருப்பதனால் ஏற்படும் கூடிய பிரச்சனைகள் பற்றியும் அவர் அனுபவித்த அழுத்தம் குறித்தும் பேசியிருந்தார். அவர் கூறுகையில் ஒரு சாதாரணமானவரின் குழந்தையாக இருப்பதை காட்டிலும் ஒரு பிரபலத்தின் குழந்தையாக இருப்பதனால் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மிக மிக அதிகம் என்றார். அவர்கள் மீது மக்களின் பார்வை எப்போதுமே இருக்கும். மேலும் அவர்களின் தொழில் சினிமாவை சார்ந்ததாக இருப்பின் உடனடியா அவர்கள் அனைத்திலும் வெற்றி பெறவேண்டும் சிறந்து விளங்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். 






இயக்குனர் ஐஸ்வர்யா: 


2012ம் ஆண்டு வெளியான "3" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா. அதனை தொடர்ந்து சினிமா வீரன் மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கினார். தொடந்து திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் வைத்து ஒரு படத்தையும் பாலிவுட்டில் ஒரு படத்தையும் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 


ஐஸ்வர்யா - தனுஷ் பிரிவு: 


தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றார். பிள்ளைகளின் எதிர்காலத்தின் மீது உள்ள அக்கறையால் அவர்களது பெற்றோர்கள் சுமுகமாக இந்த பிரச்னையை தீர்க்க பார்க்கிறார்கள். தனுஷ் சற்று இறங்கி வர தயாராக இருந்தாலும் ஐஸ்வர்யா அதற்கு ஒத்துவர மறுக்கிறார் என கூறப்படுகிறது. சிலர் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் மறுபடியும் சேர்ந்து வாழ முடிவு எடுத்துள்ளனர் என தகவல்கள் பரிமாறப்படுகிறது ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவலும் வெளிவரவில்லை.