Behind The Song வரிசையில் இன்று நாம் இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் ஒரே மாதிரி ட்யூனை பயன்படுத்திய பாடல்கள் பற்றி காணலாம்.
என்னென்ன படங்கள்?
- கடந்த 2009 ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஆர்யா, திரிஷா, ஜே.டி.சக்கரவர்த்தி நடிப்பில் “சர்வம்” படம் வெளியானது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.
- இதேபோல் 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் என பலரும் நடித்த “ஆயிரத்தில் ஒருவன்” படம் வெளியானது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்தார்.
நன்றாக கவனித்தால் இந்த படங்களில் ஒரே ஒரு பாடல் மட்டும் ஒரே மாதிரியான ட்யூனை பயன்படுத்தி போடப்பட்டிருக்கும்.
அந்த 2 பாடல்கள் என்ன தெரியுமா?
அந்த இரண்டு பாடல்கள் என்னவென்று கேட்டால், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற தனுஷ் பாடிய "உன் மேல ஆசைதான்" பாடல் மற்றும் சர்வம் படத்தில் இடம் பெற்ற இளையராஜா பாடிய "அடடா வா அசத்தலாம்" என்ற இரு பாடல்களையும் இப்போது கேட்டாலும் ஒரே டியூனில் இருப்பதை கவனிக்கலாம்.
யுவன் & ஜி.வி.பிரகாஷ்குமாரின் கருத்து என்ன?
ஒரு நேர்காணலில் யுவன் சங்கர் ராஜாவிடம், சர்வம் படத்துக்கு நீங்கள் போட்ட ஒரு டியூனும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் ட்யூனும் ஒரே மாதிரி இருக்குமே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "சம்பந்தப்பட்ட அந்த டியூன் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக போடப்பட்டது தான்.
ஆனால் எதிர்பாராத விதமாக நான் அந்த படத்தில் வேலை செய்யவில்லை. அதனால் வேஸ்ட் ஆக இருந்த அந்த டியூனை இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் கொடுத்து விட்டேன். அவரும் ஓகே சொல்லிவிட்டார். சில நாட்களுக்கு பிறகு செல்வராகவனிடமிருந்து எனக்கு போன் வந்தது. "ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இந்த டியூனை வைத்து ஒரு பாட்டு வைத்துள்ளேன் உனக்கு தெரியாதா?" என கேட்டார். நான், "அய்யய்யோ எனக்கு தெரியாதே. நான் விஷ்ணுவுக்கு கொடுத்து விட்டேனே" என்ன பதில் சொன்னேன். சரி விடுயா பார்த்துக்கலாம் நான் செல்வா சொல்லிவிட்டார்.
அதே சமயம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், "சம்பந்தப்பட்ட அந்தப் பாடலை விஷுவல் அடிப்படையில் மியூசிக் செய்ததாக குறிப்பிட்டு இருப்பார்".