Beast Third Single: இனி இன்னும் பயங்கரமா இருக்கும்.. அடுத்த சம்பவத்துக்கு ரெடியா.. பீஸ்டின் 3 சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

பீஸ்ட் படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.

Continues below advertisement

பீஸ்ட் படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.

Continues below advertisement

இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் அண்மையில் பீஸ்ட் படத்தில் இருந்து வெளியிடப்பட்ட ட்ரெய்லரில் இந்தப்பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தப்பாடல் நாளை வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.  

 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது.

படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது.

 

அதனைத்தொடர்ந்து வெளியான போஸ்டரும் வைரலான நிலையில், விஜய் குரலில் ‘ஜாலிலோ ஜிம்கானா’ பாடலும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் அண்மையில் படத்திலிருந்து ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது.

இன்று பீஸ்ட் டிக்கெட்டுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், அந்தப்படத்திற்கான முதல்காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் அசுர வேகத்தில் விற்றுத்தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola