தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய்(Actor Vijay). மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்துள்ளார். பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது. திரையரங்குகளில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.



படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.  சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது. இந்நிலையில், படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி  பட்டையைக் கிளப்பியது.  இந்நிலையில் படத்தில் ரிலீஸ் தேதி தொடர்பான அப்டேட்டை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். அதன்படி ஏப்ரல் 2ம் தேதி மாலை 6மணிக்கு பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்ம ஆட்டம் இனி வேற மாதிரி என்ற தலைப்புடன் இந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பீஸ்ட் படம் சென்சார் ஆகியிருக்கிறது. U/A சான்று பெற்றிருக்கிறது. சென்சார் வேலை முடிந்துவிட்டதால் தயாரிப்பு தரப்பு ஏப்ரல் 13 தான் ரிலீஸ் தேதி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.



பீஸ்ட் படத்திற்காக 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 10 ம் தேதி ஒளிபரப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது பீஸ்ட் திரைப்பட இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தானாம். நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் நெல்சனினின் கலகலப்பான கரைந்துரையாடலாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.