நடிகை துஷாரா விஜயனை பயில்வான் ரங்கநாதன் கேட்ட கிடுக்குப்பிடி கேள்விகளை இங்கு பார்க்கலாம். 


அண்மையில்  ‘நட்சத்திரம் நகர்கிறது’ படமானது பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் படத்தின் நாயகி  துஷாரா விஜயன் கலந்து கொண்டார்.


 






படத்தை பார்த்து முடித்த திரைவிமர்சகர் பயில்வான் ரங்கநாதன், நடிகை துஷாரா விஜயனிடம் சில காரசாரமான கேள்விகளை முன்வைத்தார்.


அந்த காரசாரமான உரையாடல் கீழே:


‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் தன்பால் ஈர்ப்பாளர்களை ஏன் காண்பித்தீர்கள்.. ஏன் புதுகலாச்சார சீரழிவை உண்டாக்குகிறீர்கள் என்று பயில்வான் கேட்க, அதற்கு பதிலளித்த துஷாரா  விஜயன் அது கலாச்சார சீரழிவா என்பது எனக்கு தெரியவில்லை. என்னை பொருத்தவரை அதை ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கிறேன் என்றார். உடனே குறுக்கிட்ட பயில்வான் அதை நீங்கள் தனியாக சொல்லியிருக்கலாம்.. ஏன் சினிமாகாரர்களோடு இணைத்து சொன்னீர்கள்.. அதுதான் கஷ்டமாக இருக்கிறது” என்றார். 




படத்தில் அர்ஜூன் கதாபாத்திரம் மற்றும் வில்லன் வைக்கும் கேள்விகளுக்கான பதில்கள் எங்கே என்று பயில்வான் கேட்க, துஷாரா, நாங்கள் எங்களது கருத்தை முன்வைத்திருக்கிறோம். யாரையும் எங்களது கருத்தை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. இதை நாங்கள் நல்ல முன்னெடுப்பு என்றே நினைக்கிறோம்” என்றார். 




தொடர்ந்து பேசிய பயில்வான், “ எங்கள் ஊரில்  நட்சத்திரம் கீழே விழுகிறது என்றால் ஒரு தலை உருள போகுது என்று  சொல்வார்கள்.. உடனே அவரை இடைமறித்த  துஷாரா, நான் நடித்த இரண்டு படத்தையும் ஒன்றாகத்தான் ஷூட் செய்தேன். எனக்கு இரண்டு படங்களும் நல்ல நினைவுகளாகத்தான் இருந்தது” என்றார். 


 






தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். சார்பட்டா படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், பா.ரஞ்சித் அட்டகத்தி பாணியில் அழகிய காதல் கதையை இயக்குவதாக அறிவித்தார். இதன்படி, நட்சத்திரங்கள் நகர்கிறது படம் உருவானது. இந்தப்படத்தில் முதன்முறையாக சந்தோஷ்நாரயணனை விடுத்து, தென்மாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். நேற்று (31-08-2022) வெளியான இந்தப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனகளை பெற்று வருகிறது.