தமிழ் சினிமாவின் பிரபலமான மூத்த நடிகர் விஜயகுமார் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் இன்று வரை நடித்து வருகிறார். அவரின் மகள் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் திருமண வைபவம் கோலாகலமாக நடந்தேறியது. திரை பிரபலங்கள் பலரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நடிகர் விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு மற்றும் நடிகை மஞ்சுளா என இரு மனைவிகள். முதல் தாரத்தின் மனைவிக்கு கவிதா, அனிதா என இரு மகள்களும் அருண் விஜய் என ஒரு மகனும் உள்ளனர். மனைவி மஞ்சுளாவிற்கு வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி என மூன்று மகள்கள். அந்த வகையில் முதல் மனைவியின் மகள் அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர். அவரின் கணவர் கோகுல் கிருஷ்ணனும் மருத்துவர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் அவர்கள் கத்தாரில் செட்டிலாகிவிட்டனர்.
மொத்த குடும்பமே திரைத்துறையில் இருப்பவர்களாக இருக்கும் போது அனிதா மட்டுமே சினிமாவில் முகம் காட்டாதவர். இவரின் மகள் தியாவுக்கு பிப்ரவரி 19ம் தேதி திருமணம் நடைபெற்றது. தியாவுக்கும் மணமகன் திலனுக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வைரலானது. மருத்துவரான தியாவின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக மகாபலிபுரம் பீச் ரிசார்ட்டில் திங்கட்கிழமை நடைபெற்றது.
ஒரு விசித்திரமான விஷயம் என்னவென்றால் மணமகன் மணமகள் தியாவின் காலை தொட்டு கும்பிடுகிறார். இது போன்ற ஒன்றை இதுவரையில் எந்த ஒரு திருமணத்திலும் பார்த்து இருக்க முடியாது. குடும்பமே டாக்டராகவும், சினிமா நடிகர்களாகவும் இருப்பதால் புது மாப்பிள்ளை இப்படி செய்தாரா என தெரியவில்லை. கல்யாணத்திற்கான செலவே கோடி கணக்கில் இருக்கும். அதை தவிர 300 சவரன் நகையும் இரண்டு பங்களாவையும் தியாவுக்கு சீதனமாக விஜயகுமார் குடும்பம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது" என பேசி இருந்தார் பயில்வான் ரங்கநாதன். அவரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.