படப்பிடிப்பு ஒன்றில் மறைந்த நடிகர், இயக்குநர் வினுச்சக்கரவர்த்திக்கும், மேக்கப் மேனுக்கு நடைபெற்ற அடிதடி பிரச்னை பற்றி நடிகர் பாவா லட்சுமணன் தெரிவித்திருப்பார் அதனைப் பற்றிப் பார்க்கலாம். 

Continues below advertisement


சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்த பெரும்புள்ளி படத்தில் பாபு, சுமன் ரங்கநாதன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்தார். இப்படத்தில் தான் பழனிபாரதி பாடலாசிரியராக அறிமுகமானார்.  இந்த படம் 1991ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் புரொடக்‌ஷன் மேனேஜராக பாவா லட்சுமணன் பணியாற்றி இருந்தார். 


ஷூட்டிங் வராமல் இருந்த வினுசக்கரவர்த்தி


ஒரு நேர்காணலில் நடிகர் பாவா லட்சுமணன் பேசும்போது, விக்ரமன் இயக்கிய பெரும்புள்ளி படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றது. அப்போது அதில் நடித்த நடிகர் வினுசக்கரவத்தியை ஷூட்டிங்கிற்காக காலை 7 மணிக்கு இயக்குநர் வர சொல்லி விட்டார். சொன்ன நேரத்துக்கு அவர் வரவில்லை. இயக்குநர் விக்ரமன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் காத்திருக்கிறார்கள். உடனடியாக அவர் தங்கியிருந்த ரூமுக்கு சென்று அவரை எழுப்பி என்ன சார் 7 மணிக்கு வர சொன்னோம். நீங்க வரவே இல்லையே என கேட்டோம். 


ஆனால் அவர், எங்களுக்கு பதில் சொல்வதற்கு பதில் அங்கிருந்த மேக்கப் மேனை அடித்து விட்டார். எதற்கு என கேட்டால், அந்த நபரிடம் தன்னை அதிகாலை 5.30 மணிக்கு எழுப்பி விட சொல்லியிருந்துள்ளார். அந்த மேக்கப் மேன் சிவாஜிக்கு எல்லாம் வேலை பார்த்தவர். அவர் திரும்ப வினுசக்கரவர்த்தியை அங்கிருந்த சேரை தூக்கி அடித்து விட்டார்.


 அதுமட்டுமல்லாமல், ஏன்டா நீயெல்லாம் ஒரு ஆள், கருவாப்பயலே, நான் சிவாஜிக்கு மேக்கப் போட்டவன்டா, உனக்கு நான் மேக்கப் போடனுமா? என பதிலுக்கு அந்த நபர் பேச மொத்த பேரும் வேடிக்கை பார்த்தார்கள். அடிக்கிறதா இருந்தா கதவை மூடிட்டு அடிடா என வினுசக்கரவர்த்தி கூறினார். அதன்பிறகு ஷூட்டிங்கிற்கு லேட்டாக வந்தார். உடனடியாக இயக்குநர் விக்ரமன் அவரிடம், நான் உங்க மேல மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தேன். நீங்க இந்த மாதிரி நடந்துட்டீங்களே என கூற, சாரி தம்பி, ரொம்ப அசதியா இருந்ததுன்னு தூங்கிட்டேன் என கூறினார். இப்படி பல பிரச்னைகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்திருக்கிறது என அவர் கூறினார். 


நடிகர் பாவா லட்சுமணன் பயணம்


பலருக்கும் பாவா லட்சுமணனை நடிகராகவே தெரியும். ஆனால் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி கம்பெனியில் அவர் புரொடக்‌ஷன் மேனேஜராக பணியாற்றினார். இதன்மூலம் திரைத்துறை வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட நபராக உள்ளார். ஆனந்தம் படம் மூலம் நடிகராக எண்ட்ரீ கொடுத்த அவர், ஏராளமான படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களிடத்தில் தனக்கென தனியிடம் பிடித்தார்.