2009ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. இவர், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியது முதல் வருடா வருடம் தன்னை கவர்ந்த/பிடித்த படங்கள், புத்தகங்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றின் பட்டியல்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இந்த வருடத்திற்கான பிடித்த படங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார் ஒபாமா. 




ஒபாமாவிற்கு பிடித்த படங்கள்!


பராக் ஒபாமா, தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு பிடித்த படங்களின் இந்த வருட பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடித்த டாப் கன் உள்ளிட்ட பல படங்கள் இடம் பெற்றுள்ளது. 


தி ஃபேபில்மேன்ஸ்(The Fabelmans)


பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்பர்க்கின் இயக்கத்தில் இந்த ஆண்டின் நவம்பர் மாத்தில் வெளியான படம் தி ஃபேபில்மேன்ஸ். இப்படம், ஸ்டீவனின் வாழ்க்கையை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூறப்படுகிறது. தி ஃபேபில்மேன்ஸ் திரைப்படம், ஒபாமாவின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 


டிசிஷன் டு லீவ்(Decision to Leave)


தென் கொரிய மொழியில் எடுக்கப்பட்ட படம் டிசிஷன் டு லீவ். மிஸ்ட்ரி த்ரில்லராக உருவாகியிருந்த இப்படம், ஒபாமாவின் லிஸ்டில் இரண்டாவதாக இடம் பிடித்துள்ளது. 


தி உமன் கிங்(The Woman King)


ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக உலா வரும் வோலா டேவிஸ்சின் நடிப்பில் வெளியான படம் தி உமன் கிங். 1800ஆண்டுகளில் ராஜாக்கள் அற்ற ஆப்ரிக்க ராஜாங்கத்தை காப்பாற்ற போராடும் பெண்கள் குறித்த படம்தான் தி உமன் கிங். இப்படமும், ஒபாமாவின் ஃபேவரட் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. 


ஆஃப்டர் சன்(Aftersun)


11 வயது குழந்தை தனது அப்பாவுடன் துருக்கிக்கு வெக்கேஷன் செல்வதும், அக்குழந்தையின் அனுபவமும்தான் படத்தின் கதை. அழகான கதையை அழுகவைக்கும் எமோஷனுடம் சொல்லும் இப்படம், இந்த ஆ்ண்டில் ஒபாமாவைக் கவர்ந்த படங்களில் ஒன்றாக உள்ளது.


எமிலி தி கிரிமினல்(Emily the Criminal)


தலைக்கு மேல் கடனில் சிக்கும், எமிலி என்ற பெண், ஒரு கட்டத்திற்கு மேல், கிரெடிட் கார்டுகளை வைத்து பிறரை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுகிறார். இப்படம், ஒபாமாவின் ஃபேவரட் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.


பெட்டீட் மேமன்(Petite Maman)


கடந்த ஆண்டு ஃப்ரெஞ்சு மொழியில் வெளியான ஃபேன்டசி ட்ராமா படம், பெட்டீட் மேமன். தாய், மகள் மற்றும் அந்த குழந்தையின் பாட்டியை சுற்றி நிழகும் சம்பவங்கள்தான் படம். இப்படம், ஒபமாவின் பிடித்த படங்களின் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.


டிசன்டன்ட்(Descendant)


இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான படம் டிசன்டன்ட். இந்த படம், ஒபாமாவின் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. 


டாப் கன்(Top Gun: Maverick)


பராக் ஒபாமா, ஃபீல் குட் படங்கள், ட்ராமா கதைகள், வரலாற்று கதைகள் என கலவையான படங்களாக இந்த வருடம் முழுவதும் பார்த்துள்ளார் போலும். இவர், டாம் க்ரூசின் டாப் கன் திரைப்படத்தையும் தனது ஃபேவரட் லிஸ்டில் இணைத்துள்ளார். 


பிற திரைப்படங்கள்


மேற்கூறிய படங்கள் மட்டுமல்லாது, இன்னும் சில திரைப்படங்களையும் தனக்கு பிடித்த பட்டியலில் இணைத்துள்ளார் ஒபாமா. 



  • ஹேப்பனிங்(Happening)

  • டில்(Till)

  • எவ்ரிதிங் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ்(Everything Everywhere All at Once)

  • தி குட் பாஸ்(The Good Boss)

  • வீல் ஆஃப் ஃபார்ச்யூன் அண்ட ஃபேன்டசி(Wheel of Fortune and Fantasy)

  • எ ஹீரோ(A Hero)

  • ஹிட் தி ரோட் (Hit the Road)

  • டார்(Tár)

  • ஆஃப்டர் யாங்(After Yang)