கோலிவுட்டில் 2 நாள்களில் 3 திருமணங்கள்.. கல்யாண சீசனில் பிஸியான செலிபிரிட்டிஸ்!

தமிழ் திரையுலகை சேர்ந்த திரை பிரபலங்களின் திருமணங்கள் கடந்த மூன்று நாட்களாக களைகட்டி வருகிறது.

Continues below advertisement

இந்த மாதம் கோலிவுட் திரையுலகத்தில் கல்யாண சீசன் அமோகமாக களைகட்டி வருகிறது. செலிபிரிட்டிகளின் திருமணம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரே குதூகலம் தான். அதிலும் அவர்களின் விருப்பமான செலிபிரிட்டிகளை மாலையும் கழுத்துமாக பார்ப்பதே அலாதியான ஒரு விஷயம் தான். அந்த வகையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் மூன்று திரைபிரபலங்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. 

Continues below advertisement

 

பிரேம்ஜி - இந்து:

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், பாடகர் என பன்முகத் திறமையாளராக விளங்கும் நடிகர் பிரேம்ஜியின் திருமணம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்த நிலையில் அவரின் திருமணம் திருத்தணி முருகன் கோயிலில் ஜூன் 9ம் தேதி நடைபெற்று முடிந்தது. சேலத்தை சேர்ந்த இந்து பிரேம்ஜிக்கு தனது காதலை ப்ரொபோஸ் செய்துள்ளார். பின்னர் பிரேம்ஜி அமரனும் இந்துவும் காதலித்து வந்த நிலையில் கடந்த வாரம் அவர்கள் இருவருக்கும் திருமணம் என திருமண அழைப்பிதழ் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

அந்த வகையில் ஜூன் 9ம் தேதி நடைபெற்ற திருமண வைபவத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. விரைவில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு  திரைப்பிரபலங்கள் அனைவருக்கும் அழைப்பு வைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. 

 


ஐஸ்வர்யா - உமாபதி :

ஆக்ஷன் கிங் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் 'சர்வைவர்' நிகழ்ச்சி மூலம் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மலர அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் இன்று ஐஸ்வர்யா - உமாபதி திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது. 

 


அஜய் தங்கசாமி - பெர்பிசியா :

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகர் சார்லியின் மகன் அஜய் தங்கசாமிக்கும் பெர்பிசியாவுக்கும் நேற்று பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று முடித்ததை தொடர்ந்து இன்று அவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. பல பிரபலங்களும் இந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

Continues below advertisement