இது குறித்து நடிகர் GV பிரகாஷ் குமார் கூறும் போது, “ இந்தப்படம் ஆண் பெண் உறவை பேசும் படமா இருக்கும். ஒவ்வொரு ஜெனரேஷனிலும் ஶ்ரீதர் சார், மணிரத்னம் சார், செல்வராகவன் சார் செஞ்சதை இந்தப் படத்துல சதீஷ் செஞ்சுருக்காரு. இது ரெகுலரான படமாக இருக்காது. என் வழக்கமான நடிப்பிலிருந்து விலகி வந்து இப்படத்தில் நடிச்சிருக்கன். டில்லிபாபு சார் கூட 3 படம் பண்ணிக்கிட்டு இருக்கன்.

Continues below advertisement

Continues below advertisement

 

தமிழின் சிறந்த இயக்குநர்களுக்கு இருக்குற ஒரு ஸ்டைல் போல சதிஷூக்குனு தனி ஸ்டைல் இருக்கு. அவர் தமிழ்சினிமாவுல பெரிய இடத்தை அடைவாரு.முதல் படத்தில பெரிய பாத்திரம் கிடைப்பது அரிதான விஷயம். அது திவ்யபாரதிக்கு கிடைச்சிருக்கு. ரொம்ப அர்ப்பணிப்போட நடிச்சுருக்காங்க. கோவையோட ரியல் சிலாங்கை கொண்டு வந்துருக்கோம்” என்றார். 

படத்தின் நடிகை திவ்யபாரதி கூறும் போது,  “  2 வருஷமா இந்த தருணத்திற்காகத்தான் உழைச்சுருக்கோம். தயாரிப்பாளர் டில்லிபாபு சாருக்கு தான் நன்றி சொல்லணும். அவர் நினைச்சுருந்தா பெரிய நடிகைகளை நடிக்க வைச்சுருக்கலாம். ஆனா என்ன நம்பி நடிக்க வைச்சதுக்கு நன்றி. முதல்ல ரொம்ப பயந்தேன்.

ஆனா கொஞ்சம் கொஞ்சமா சரியாச்சு. க்ளைமாக்ஸ் எல்லாம் என்னால் பண்ண முடியாது என நான் அழுதேன். ஆனா சதீஷ்தான் ஆறுதல் சொல்லி நடிக்க வைச்சாரு. ஜீவி சார் மிக இயல்பாக இருந்து, எனக்கு டயலாக் எல்லாம் சொல்லிக் கொடுத்தாரு. என் அம்மா சிங்கிள் பேரண்ட் எப்பவும் என் கூடவே இருந்தாங்க. எல்லோரும் படம் பாருங்கள் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.” என்றார்.

வருகிற 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக பேச்சுலர் திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ்குமார், திவ்யபாரதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தின் பிண்ணனி இசையை சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் இசையமைப்பாளர் சித்து இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். இவர் தவிர திபு நினன் தாமஸ், காஷ்யப் ஆகியோரும் படத்தில் இசையமைத்துள்ளனர்.