மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகை திவ்ய பாரதி, அங்கு பிகினி போன்ற உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


‘பேச்சுலர்’ பட மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி.அந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்த அவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இந்தப் படம் கொடுத்த வரவேற்பால், தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படங்களில் நடித்துக்கொண்டே சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கிறார் திவ்ய பாரதி. விதவிதமான போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். அவரை ஃபாலோ செய்யும் ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு தங்களின் கமெண்ட்டுகளை தெரிவிப்பார்கள்.


தற்போது திவ்யபாரதி மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடலின் அருகே சூரிய அஸ்தமனமாகும் நேரத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். பிகினி போன்ற கவர்ச்சியான உடையில் இந்த போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு அவர் வெளியிட்ட புகைப்படங்கள் கிளாமராக இருந்த நிலையில், தற்போது இது படு கிளாமராக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 


 “உங்களுக்கு தேவையானது அன்பு மற்றும் சூரிய அஸ்தமனம் மட்டுமே” என்று பதிவிட்டு இந்த புகைப்படங்களை திவ்யபாரதி வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 


 






முன்னதாக, தாய்லாந்து சுற்றுப்பயணத்தின்போது, ஒரு தீவில் உள்ள பீச்சில் ஜாலியாக நடந்து மண்ணிலும், தண்ணீரிலும் விளையாடிய வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண