பிரபல தொலைக்காட்சி ஒன்று மேஜிக் மிரர் என்கிற புதுவகையான நேர்காணல் ஒன்றை நிகழ்த்தி வருகிறது.அதில் அண்மையில் பேச்சிலர் படத்தில் மெயின் ரோலில் நடித்த திவ்ய பாரதி பங்கேற்றிருந்தார். அதில் அவர் அளித்த பதில் தொகுக்கப்பட்டு இதோ...





“என் வீட்டில் அம்மா, தம்பி அப்புறம் நான் மட்டும்தான். அப்பா கிடையாது.ஸ்கூல் காலேஜ் படிக்கும்போது வெளியே தனியா போனது கிடையாது. ஆனால் இப்போ தனியா வந்து படத்தில் நடித்து இன்றைக்கு இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்பது என்னைப் பார்த்து நானே வியக்கிற விஷயம்.  அப்புறம், அம்மாவுக்காக ஒரு குட்டியா வீடு வாங்கித்தரனும் அதில் தோட்டம் வைத்துத் தரணும் என்பது என்னுடைய ஆசை. அவங்க எங்களுக்காக எவ்வளவோ தியாகம் செய்திருக்காங்க.அவங்களை ஒரு வீட்டில் செட்டில் செய்யவேண்டும் என்கிற ஆசை இருக்கு. அதுதான் என்னுடைய கோல். இன்ஜினியரிங் முடிச்சிட்டு சினிமா வருவேன் என்று நினைத்துப் பார்க்கலை ஆனால் பேச்சிலர் வாய்ப்பு கிடைத்தது.நிஜ வாழ்க்கையில் ஃப்ரெண்ட்ஸ் கூட பில்லோ ஃபைட் செய்தது இல்லை.அந்த காட்சில நடிக்கிறது கூட கஷ்டமாகத்தான் இருந்தது.எனக்கு முதல் ஆசை காதல் எல்லாமே கரியர்தான். காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன். மற்றபடி காதல் என்பது இருவருக்குமான புரிதல். என க்யூட்டாகச் சொல்லி முடிக்கிறார். 


திவ்ய பாரதிக்கு அழகு என்றால் என்ன எனத் துணுக்காக ஒரு கேள்வி கேட்கப்பட்டது,”அழகு என்பது அவரவர் கண்களில்தான் இருக்கு.முக்கியமா மன அமைதியுடன் இருந்தா அழகாகத்தான் இருப்போம்.” எனச் சிம்பிளாக முடிக்கிறார்.


தற்போது தொடர்ந்து மாடலிங் செய்துவரும் திவ்ய பாரதி மதில் மேல் காதல் என்கிற குறும்படத்தில் நடித்து வருகிறார்.