நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை பேபி விசித்ரா அஜித்துடன் தான் நடித்த அனுபவங்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில் வெளியான படம் ‘ஆசை’. இந்த படத்தில் அஜித்குமார், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், ரோகினி,பூர்ணம் விஸ்வநாதன், வடிவேலு, தாமு என பலரும் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த இப்படம் வித்தியாசமான திரைக்கதைக்காக மகத்தான வெற்றி பெற்றது.
குறிப்பாக பிரகாஷ்ராஜின் வில்லத்தனமும், அஜித்தின் துடிப்பான நடிப்பும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இன்று தல என அனைவராலும் கொண்டாடப்படும் அஜித்துக்கு ஆசை படம் தான் முதல் பிளாக்பஸ்டர் வெற்றி படமாகும். அந்த காலக்கட்டத்தில் எங்கு சென்றாலும் அவரை ஆசை நாயகன் என்றே அழைத்தனர். இப்படியான நிலையில் ஆசை படத்தில் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.
கோயில் ஒன்றின் குளத்தில் அமர்ந்திருக்கும் அஜித்திடம் 3 சிறுமிகள் பேசுவது போன்றும், அப்போது என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? என அச்சிறுமிகள் கேட்பது போலவும் காட்சி இருக்கும். இந்த காட்சியில் நடித்தவர்களில் ஒருவர் நடிகை மோனிகா மற்றும் இன்னொருவர் பேபி விசித்ரா. இதில் மோனிகா பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானார்.
அதேசமயம் பேபி விசித்ராவும் அன்றைய கால ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்த முகமாக மாறினார். தளபதி படத்தில் பானுப்பிரியா மகளாக ரஜினியிடம் உட்கார்ந்து கதை கேட்பாரே அவர் தான் பேபி விசித்ரா. தமிழில் ஜென்ம நட்சத்திரம், பம்பாய், வெற்றிப்படிகள், ஜெய்ஹிந்த், காவல் கீதம், ஜென்ம நட்சத்திரம் என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியுள்ளார். இப்படியான நிலையில் பேபி விசித்ரா லேட்டஸ்ட் நேர்காணல் ஒன்றில் அஜித் பற்றி பேசியுள்ளார்.
அதில், “எனக்கு இன்னும் அந்த சீன் நியாபகம் இருக்கும். அந்த காட்சியில் 3 பேர் உட்கார்ந்து இருந்தோம். சரியான வெயிலில் தான் அந்த காட்சியை எடுத்தார்கள். துணியை கட்டிட்டு நாங்க உட்கார்ந்து இருக்க, ஷார் எடுக்கும்போது தண்ணியை தலையில் ஊற்றுவார்கள். அது அடிக்கிற வெயிலுக்கு காய்ந்து விடும். அப்புறம் அஜித்திடம் கொஞ்சுட்டு அழகா இருக்க கல்யாணம் பண்ணிக்கிறியான்னு அப்ப கேட்டேன். ஆனால் மிஸ் பண்ணிட்டேன்” என கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Saranya Ponvannan: இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தும் ரொம்ப ஃபீல் பண்றேன் - சரண்யா பொன்வண்ணன் வருத்தம்!