அம்மன் படத்தில் குட்டி அம்மன் கதாபாத்திரத்தில் நடித்த பேபி சுனைனா அந்த படத்திற்கு பிறகு வாய்ப்புகளே வரவில்லை என்று புலம்பியிருக்கிறார்.


இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் நடிகைகள் செளந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அம்மன்’. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்ததிரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 


இன்று வரை கல்ட் மூவியாக பார்க்கப்படும் இந்தப்படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனும், ஏழை வீட்டு பெண் கதாபாத்திரத்தில் நடிகை செளந்தராயாவும் நடித்திருந்தனர். வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ராமி ரெட்டியும் நடித்திருந்தனர்.


 






செளந்தர்யாவுக்கு உதவும் குட்டி அம்மன் கதாபாத்திரத்தில் நடிகை பேபி சுனைனா நடித்திருந்தார்.


 




ரம்யாகிருஷ்ணன், செளந்தர்யா ஆகியோருக்கு திருப்புமுனையாக அமைந்த இந்தப்படம் பேபி சுனைனாவுக்கு அப்படியான படமாக அமையவில்லை என்று அவர்  பேசியிருக்கிறார். 


வீடியோ லிங்க் கீழே


அம்மன் படத்திற்கு பிறகு வாய்ப்புகள் வரவில்லை - பேபி சுனைனா


ஆம் அண்மையில் கொடுத்த நேர்காணல் ஒன்றில், இந்தப்படத்திற்கு பிறகு தனக்கு வாய்ப்புகளே வரவில்லை என்று புலம்பியிருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், “ அம்மன் படம் வெளியான போது எங்கு பார்த்தாலும் அம்மன்.. அம்மன் என்றே பேசினார்கள். அம்மன் படம் அடையாளமாக மாறியது. அதன் பின்னர்  ஹீரோயின் வாய்ப்புகளை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. யாருமே சான்ஸ் கொடுக்க முன்வரவில்லை. அம்மன் எப்படி ஹீரோயின்னு கேட்டாங்க. முந்தாநாள் கோயிலுக்கு போயிருந்த போது கூட.. அம்மன் ஷால் இல்லாமல் வரலாம்மான்னு கேட்டாங்க.. அந்த இயக்குநர் உண்மையிலேயே எனக்கு துரோகம் பண்ணிட்டார் (  நகைச்சுவையாக)” என்று பேசியிருக்கிறார்.