மாற்றுத்திறனாளி மகனை வைத்து மார்க்கெட்டிங் செய்கிறீர்களா? இந்த வயதில் பெண் சுகமா? போன்ற கமெண்டுகளுக்கு நடிகர் பப்லு பிரித்திவிராஜ்  பதிலளித்து இருக்கிறார்.

Continues below advertisement


பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமாவனர் நடிகர் பிரித்விராஜ். கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியான  ‘சுவர்கள்’ படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் சிவாஜி, ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். பப்லு பிரித்விராஜ் என்று திரை வட்டாரத்தில் அழைக்கப்படும் இவர், மர்மதேசம் என்ற சீரியலில் நடித்ததின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது அவர் சன்டிவியில் ஒளிப்பரப்பாகி வரும்  ‘கண்ணான கண்ணே’ சீரியலில் கதாநாயகின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 




விஜய் டிவி உட்பட பல்வேறு  தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று இருக்கும் இவருக்கு, கடந்த 1994 ஆம் ஆண்டு பீனா என்பவருடன்  திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆஹத் என்ற மகன் (மாற்றுத்திறனாளி)  உள்ளார். வாழ்கை நன்றாக சென்றுக்கொண்டிந்த நிலையில் பிரித்விக்கும், அவரது மனைவிக்கும் இடையே பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்ட நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.





Published at: 28 Oct 2022 03:37 PM (IST)
Continues below advertisement
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.