கேரளாவை பூர்வீகமாககொண்டவர்நடிகர்ரகுவரன். தமிழில்கடந்த 1982-ஆம்ஆண்டுவெளியான 'ஏழாவதுமனிதன்', திரைப்படத்தின்மூலம், அறிமுகமானார். தமிழ்சினிமாவில்இவருக்குதொடர்ந்து,குணச்சித்திரவேடம்மற்றும்வில்லன்கதாபாத்திரத்தில்மட்டுமே நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்தன.

சினிமாவில்ஒருநிலையானஇடத்தைபிடித்தபின்னர், சிலபடங்களில்ஹீரோவாகவும்நடித்தார். ஆனால்அந்தபடங்கள்பெரிதாகவரவேற்பைபெறாதநிலையில், மீண்டும்குணச்சித்திரம்மற்றும்வில்லன்ரோலில்நடிக்கதுவங்கினார். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அதை உள்வாங்கிக் கொண்டு, தனக்கே உரியபாணியில் சிறப்பாக நடிக்கும் திறன் படைத்தவர் ரகுவரன்.

இவர் நடிப்பில் வெளியான பாட்ஷா, மனிதன், தாய் மேல் ஆணை, அஞ்சலி, காதலன், முத்து, ரட்சகன், அமர்க்களம், யாரடிநீமோகினி, போன்ற படங்கள் தற்போது வரை ரசிகர்கள்மனதைவிட்டுநீங்காதபடங்களாகும். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக முதல்வன் படத்தில் நடித்ததற்காக, சிறந்த வில்லன் நடிகருக்கான தமிழக அரசின் விருதுரகுவரனுக்குகிடைத்தது.

சினிமாவில்பிசியாகநடித்துகொண்டிருக்கும்போதே... தனக்குஜோடியாக நடித்த நடிகை ரோகினியை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குஆண்குழந்தைஒன்றும்பிரிந்தநிலையில், கருத்துவேறுபாடுகாரணமாகஇருவரும் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ரகுவரன் - ரோகிணியின்மகன் ரிஷிவரன் தற்போது தன்னுடையபடிப்பைமுடித்துவிட்டநிலையில்,விரைவில்சினிமாவில்அறிமுகமானாலும்ஆச்சரியப்படுவதற்குஇல்லை.

சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரகுவரன், 2008 ஆம் ஆண்டு தன்னுடைய 49 வயதில் அதிகமான குடிக்கு அடிமையாகி அதனால் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக உயிரிழந்ததாககூறப்பட்டது. அவர் இறந்து 17 வருடங்கள் ஆகும் நிலையில், இவருடைய நண்பரும்... பிரபல நடிகருமான பப்லு பிரித்திவிராஜ் முதல் முறையாக ரகுவரனின் மரணம் குறித்து கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய பப்லு, " ரகுவரனும் நானும் ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். அவரும் - நானும் பார்ப்பதற்கு ஒரேமாதிரிதான்இருப்போம். ஆனால் உயரத்தில் மட்டுமே இருவரும் மாற்றங்கள்இருக்கும். அவர் தன்னுடைய விவாகரத்துக்கு பின்னர், குடிபழக்கத்தைதாண்டி போதைக்கு அடிமையாக மாறினார்.

அவரை திருத்துவதற்காக நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் ஆனால் முடியாமல் போனது. அவர் முழுக்க முழுக்க போதை மருந்துக்கு அடிமையானதால் சில நாட்களிலேயே, அவருடைய மூளையில் இருக்கும் நினைவு பகுதி செயல் இழக்கும் நிலைக்கு சென்றது. அதுதான் அவருடைய மரணத்திற்கு மிக முக்கிய காரணம் எனக் கூறியுள்ளார். இந்ததகவல்தற்போதுகோலிவுட்வட்டாரத்தில்பரப்பரப்பைஏற்படுத்தியுள்ளது.