சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் வருகின்ற ஆக்ஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஜெயிலரைத் தவிர்த்து ரஜினி நடித்திருக்கும் மேலும் மூன்று படங்களை ரசிகர்கள் திரையரங்கில் காணலாம்.
மூன்று முகம்
1982 ஆம் ஆண்டு ஏ ஜெகன்நாதன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மூன்று முகம். அலெக்ஸ் பாண்டியன் , அருண், ஜான் என இந்தப் படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் தோன்றினார் ரஜினிகாந்த். ரஜினியின் கரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த மூன்று முகம் திரைப்படம் திரையரங்குகளில் மொத்தம் 250 நாட்கள் ஓடியது. தற்போது ஜெயிலர் படம் வெளியாவதை முன்னிட்டு மூன்று முகம் படம் மறுவெளியீடு செய்யப்பட்டிருக்கிறது.
பாபா
பாஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு பாபா திரைப்படம் வெளியானது. ரஜினி , மனிஷா கொய்லாரா, கெளண்டமனி நம்பியார், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்திருந்தார். பாபா திரைப்படத்தின் 10 ஆவது வருடம் நிறைவை முன்னிட்டு கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தர்போது மீண்டும் ஒரு முறை பாபா திரைப்படம் வெளியாகி உள்ளது.
சிவாஜி
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஷ்ரேயா, விவேக், விவேக் உள்ளிட்டோர் நடித்து வெளியான சிவாஜி மிக பிரம்மாண்டமான வெற்றியடைந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்து கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
2.0
எந்திரம் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 கடந்த 2018 ஆம் வருடம் வெளியானது. ஷங்கர் இயக்கி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள்.
ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
அதிகரிக்கும் எதிர்ப்பார்ப்பு
ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. இதற்கும் முக்கிய காரணம் ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு நிகழ்வில் படம் மற்றும் இயக்குநர் நெல்சன் குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது இதுதான். ”முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ் போன்ற இயக்குநர்கள் என் கேரியரை உயர்த்தியவர்கள்; இப்போது நெல்சனும் இந்தப் பாதையில் இருக்கிறார்” என நெல்சன் குறித்து அவர் பேசினார். மேலும் இந்தப் படம் பாட்ஷா மாதிரி இருக்குமா என்று தெரியவில்லை ஆனால் பாட்ஷாவுக்கும் மேலே இருக்கும் என்று ரஜினி பேசியது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளது.